முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஆட்சிகாலத்தில் புலி பயங்கரவாதிகளுக்கு 8,000 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
ராடா நிறுவனம், புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புலிகளுக்கு உதவியோர் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது.
அதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம் என்று அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாருடைய அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ராடா நிறுவனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஆட்சிகாலத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் தலைவர் டிரான் அலஸ் ஆவார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எங்களுடைய இராணுவ வீரர்களை மாண்டுகொண்டிருந்த நேரம் பயங்கரவாதிகளுக்கு 8,000 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலில் அடிப்படையிலேயே முறைபாடு செய்துள்ளோம்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று நானும் வாக்குமூலம் அளித்துள்ளேன். வாக்குமூலம் அளித்தமைக்காக யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ எனும் கற்பாறையுடன் மோதியதால் தற்போது பலன் கிடைத்துள்ளது :சரத் பொன்சேகா.
10-04-2015

sarath-fonseka-with-rajapaksaராஜபக்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கண்டி பெளத்த இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி ரீதியாக இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு திட்டமும் கொள்கையும் தற்போதைய அரசுக்குக் கிடையாது. அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்து விட்ட போதும் விவசாய கைத்தொழில் கடற்தொழில் தொடர்பான துறைகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை.

முன்னைய அரசைப் போன்றே வினைத்திறனற்ற வயிற்றுப்பிழைப்பை மையமாகக் கொண்ட அரசாகவே உள்ளது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அது நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும்.

பிரபலமான இரு கட்சிகளையும் சேர்ந்த ஊழல் பேர் வழிகள் தேர்தல் திணைக்களத்தில் செல்வாக்குச் செலுத்தாமல் இருப்பார்களாயின் நியாயமான ஒரு தேர்தலை எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியும்.

தேர்தல் திணைக்களத்தில் நேர்மையாக இயங்கக் கூடிய ஒரு சூழல் மிகச் சிரமத்திற்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

2012 மே மாதம் 21ஆம் திகதி நான் சிறையிலிருந்து விடுதலையான போது இவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படவில்லை. என்னுடன் ஏழு எட்டுப்பேர் அளவில் தான் இணைந்திருந்தனர்.

எனக்கு எதுவித பலமும் இல்லாத போதும் 2015 ஆம் ஆண்டுடன் ராஜபக்ஷ ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று கூறினேன்.

அப்போது சிலர் என்னிடம் கூறினார்கள் கற்பாறையுடன் மோதி தலையை உடைக்க வேண்டாம் என்று. என்னைப் பார்த்து பித்தன் என்று கூடக் கூறினர். ஆனால் அன்று நான் எதிர்பார்த்தது இன்று நடந்துள்ளது.

நாம் பொதுமக்களுடன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் உண்மையான மனிதாபிமானமுள்ள அரசியல் வாதியாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply