14 வய­தான பாட­சாலை மாண­வியுடன் காதல் தொடர்பு கொண்­டி­ருந்த 16 வயது மாண­வ­ரொ­ருவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் காத­லியை வய­தான பெண்கள் இருக்கும் வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று இரவைக் கழித்­துள்­ள­தாக களுத்­ துறை வடக்கு பொலிஸார் தெரி­விக்கின்­றனர்.

களுத்­துறை நக­ரி­லுள்ள பாட­சாலை ஒன்றின் 8 ஆம் ஆண்டில் மாணவி கல்வி கற்று வந்­துள்­ள­துடன் அதே பாட­சா­லை யில் 11 ஆம் ஆண்டில் மாணவன் கல்வி பயின்று வந்­துள்ளான் என் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தமது மகள் காணாமற் போயுள்­ள­தாக தாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன் பின்னர் தாய் மகளை பொலிஸார் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்த பின்னர் மாணவி வைத்­திய பரிசோதனைக­ளுக்­காக நாகொட வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார்.

இந்த மாண­விக்கும் மாண­வ­னுக்­கி­மி­டையில் காதல் தொடர்பு இருந்­தா­கவும் பின்னர் இரு­வரும் பாட­சா­லைக்கு வந்து பாட­சா­லையின் பின்னர் இந்த வீட்­டுக்கு வந்து இரவைக் கழித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

காத­ல­னான 16 வயது மாண­வனை பொலிஸ் நிலை­யத்­திற்கு வரும்­படி பொலிஸார் அறி­வித்த போதும் மாணவன் வராததால் அவனை கைது செய்ய நடவ டிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

5 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது

10-04-2015
4259086691189688856child-abuse2தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் (29 வயது) கூறியதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தங்கொட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கடுமையான வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மாரவில நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Share.
Leave A Reply