வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திபுர வீதியில் 13 திங்கள் இன்று காலை பஸ் வண்டி குடைசாய்ந்ததில் பயணிகள் கா யங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது இன்று காலை தாந்தாமலை வாழைக்காலை பிரதேசத்திலிருந்து சுமார் 50ற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு களுவாஞ்சிகுடி நேக்கி சென்றுகொண்டிருந்த பஸ் வண்டி காந்திபுர வீதியில் கட்டுப்பாட்டை இழந்த போது வீதியின் அருகில் உள்ள வாய்கால் பகுதியில் வீழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் இரண்டு அம்பியுலன்ஸ் உடனடியாக அனுப்பப்பட்டு இதில் காயமடைந்த 32 பேர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , 6 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், 11 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இந்த பஸ்வண்டியில் பணித்த பயணிகள் அதிகமானவர்கள் தங்களின் சித்திரைப்புத்தாண்டினை கொண்டாடும் வகையில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது
மேலதிக விசாரணைகளை வெல்லவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.