ஜேர்மனியில் 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது மூதாட்டி மீண்டும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில்(Berlin) அனிகிரிட்ரவுனிக்(Annegret Raunigk Age-65) என்ற மூதாட்டி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசி குழந்தையாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அவருக்கு, ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடைசியாக பெற்ற பெண் குழந்தையின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
தற்போது அவர் நான்கு குழந்தைகளை வயிற்றில் சுமந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.