இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்களின் மீது தாக்குதல் எதுவுமே நடக்கவில்லையா? என்ற கேள்வி நம் முன்னர் எழுப்பப்படுமானால், அதற்கு ‘ஆம். நடந்தது’ என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும்.
ஆனால், முஸ்லிம்களின் மீதான வன்முறை ஒப்பீட்டளவில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடந்த வன்முறையை விடவும் மிக, மிகக் குறைந்ததே. அதனைக் குறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
தேசப் பிரிவினையின் போது முஸ்லிம்களின் மீதான தாக்குதல் அதிக அளவில் நடந்தது இந்தியப் பகுதியிலிருக்கும் கிழக்கு பஞ்சாபில் மட்டுமே, பாகிஸ்தானியப் பகுதியில் சிக்கித் தங்களின் உடைமைகளையும், உயிரையும் இழந்த தங்களின் சகோதரர்களுக்குப் பதிலடியாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.
ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. முஸ்லிம்களின் மீதான சீக்கியர்களின் கோபத்திற்கு கடந்த கால வரலாறும் ஒரு காரணம்.
guru-nanak
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனான பாபரின் காலத்தவர். தன் கண் முன்னே அப்பாவி இந்துக்கள் கூட்டம், கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதனையும், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இடித்துத் தள்ளப்படுவதனையும் கண்டவர் குரு நானக்.
மொகலாயனான பாபரினால் நடத்தப்பட்ட அந்தக் கொடூரங்களைக் குறித்து அவரது “பாபர் வாணி”யில் துல்லியமாகப் பதியும் குரு நானக், அந்தக் காட்டுமிராண்டித்தனங்களை மிகக் கடுமையாகக் கண்டித்தவர்.
அப்பாவி இந்துக்களின் மீது முஸ்லிம்கள் நடத்திய குரூரங்களை கடவுளிடம் விவரிப்பது போல அவர் எழுதிய பகுதிகள், என்றைக்கும் அழியாத வகையில் சீக்கியர்களின் புனித நூலான ‘குரு கிரந்த சாஹிப்’பில் இணைக்கப்பட்டுள்ளன.
பிற்காலத்தில் குரு நானக்கின் பின் வந்த சீக்கிய குருக்களும் முஸ்லிம்களின் குரூரத்திற்கு ஆளானார்கள்.
ஜஹாங்கீர், தனக்கு எதிராக அவனது மகனான இளவரசன் குஸ்ரு புரட்சியில் ஈடுபட்ட போது அதற்கு ஆதரவளித்த சீக்கிய குரு அர்ஜுன் தேவினை (Guru Arjun Dev) இறக்கும் வரை சித்திரவதை செய்து கொல்லும்படி ஆணையிட்டான்.
அதன் பின்னர், காஷ்மீரி இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது குறித்துக் கேட்கச் சென்ற சீக்கிய குருவான தேஜ்பகதூரையும், அவரது சீடர்களையும் ஔரங்கசீப் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்தான்.
குரு தேஜ்பகதூர் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கையில் அவரது தலை துண்டிக்கப்பட்டது.
1705-ஆம் வருடம் ஔரங்கசீப், குரு தேஜ்பகதூரின் மகனான குரு கோவிந்த் சிங்கையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்கி, அவர்களின் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டான்.
அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழியமைத்துத் தருவதாக வாக்குக் கொடுத்த ஔரங்கசீப், குரு கோவிந்த் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் கோட்டையை வெட்டு வெளியே வந்தும் அவர்களைப் படுகொலை செய்து கொன்றான்.
குரு கோவிந்த் சிங்
அதிர்ஷ்வசமாக குரு கோவிந்த் சிங் காயங்களுடன் அங்கிருந்து தப்பினார். இருப்பினும் ஔரங்கசீப் அவரை விடாமல் பின்தொடர்ந்தான்.
இறுதியில் 1707-ஆம் வருடம் ஔரங்கசீப்பின் சிர்ஹிந்த் (பஞ்சாப்) கவர்னரான வஸீர் கான் என்பவன் குரு கோவிந்த் சிங்கைக் கொன்றான்.
இந்த வரலாற்றுப் பின்னணியில், முஸ்லிம்கள் மீதான சீக்கியர்களின் கோபம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் தங்களின் சீக்கிய குருமார்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டதன் காரணமாக அவர்கள் தீராத வன்மத்தில் இருந்தார்கள்.
இதன் காரணமாகவே முஸ்லிம்களும் இணைந்து துவக்கிய சிப்பாய்க் கலகத்தின் போது (1987- முதல் இந்திய சுதந்திரப் போர்) சீக்கியர்கள் பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்துகொண்டு அந்தக் கலவரத்தை அடக்கினார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
‘மாப்ளா’ கலவரங்களும், கல்கத்தாவில் முஸ்லிம்கள் தங்கள் சீக்கிய சகோதரர்கள் மீது நடத்திய வெறியாட்டங்களும், மேற்குப் பஞ்சாபிலும், அமிர்தசரஸிலும் நடந்தேறிய அவலங்களும், கிழக்கு பஞ்சாபில் சீக்கியர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை நடத்தக் காரணமாக இருந்தன.
இனி முஸ்லிம்களின் மத்தியில் அல்லது முஸ்லிம்களுடன் இணைந்து அமைதியாக வாழ்வது என்பது மிகவும் கடினம் என்பதனை உணர்ந்து கொண்ட சீக்கியர்கள் கிழக்குப் பஞ்சாபிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்க முனைந்தார்கள்.
இருப்பினும் சீக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடி வெளியிட்ட ஒரு அறிக்கை, முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைத் தாக்குவதனை சீக்கியர்கள் தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.
“முஸ்லிம்களுடனான நட்பினை நாங்கள் விரும்பவில்லை; மேலும் இனி ஒருபோதும் அவர்களை எங்களது நண்பர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாங்கள் மீண்டும் போரிட வேண்டியிருக்கலாம். ஆனால் அது நேரடியான போராகத் தான் இருக்கும். ஆண்கள் ஆண்களைக் கொல்லப்படுவதுதான் இனி நடக்கும்.
அகதிகளாக வரும் (முஸ்லிம்) பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்….(பாகிஸ்தானுக்குச் செல்லும்) அகதி ரயில்களின் மீது, சாலையில் செல்லும் அகதிகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்… நமது பாரம்பரியத்தினைக் காப்பாற்றுவது மிக முக்கியமானது….”
சிறிது விசித்திரமான அறிக்கையாக இருந்தாலும், முஸ்லிம் ஆண்களுடன் நேரடியாக சண்டையிடுவதன் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைத் தாக்காமல் இருப்பதனையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
ஆனால், பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களின் கொடூரங்களை அனுபவித்த சீக்கியர்கள் தங்களின் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தனர்.
இன்னொருபுறம், இந்துக்களின் தாக்குதல்கள் காரணமாக அல்வார் மற்றும் பரத்பூர் ராஜ்ஜியங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும் அழிவினைச் சந்தித்தனர்.
பரத்பூரும், அல்வாரும் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்ட சுதந்திர அரசுகள். மியோக்கள் (Meo) என்றழைக்கப்பட்ட முஸ்லிம் இனத்தவர்கள் இந்தப் பகுதியில் பெருமளவில் வசித்தனர்.
முப்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், ஏறக்குறைய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மியோக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
நவகாளியிலும், பஞ்சாபிலும் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு பதிலடியாக ராஜஸ்தானிலும் கலவரம் ஏற்பட்டது. இருபக்கத்திலும் ஏராளமான சேதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் இயான் கோப்லெண்ட்.
டில்லியின் புறத்தே அமைந்திருக்கும் இந்து கிராமங்களின் மீது முஸ்லிம் மியோக்கள் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்துக்கள் அருகிலிருந்த அல்வார் ராஜ்ஜியத்தைத் தாக்கினார்கள்.
பத்திரிகையாளர் கோஸ்லா, “இந்துக்களின் கிராமங்களில் மீது முதலில் தாக்குதலை ஆரம்பித்த மியோக்கள் ஏரளமான வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்த இந்துக்களின் எதிர்த் தாக்குதல்களில் அல்வாரின் மியோக்கள் அழிக்கப்பட்டார்கள்” என்கிறார். இத்துடன் மியோக்கள் ராஜஸ்தானின் மத்தியப் பகுதியைக் கைப்பற்றித் தங்களுக்கென ஒரு தனி முஸ்லிம் நாடான ‘மியோஸ்தானை’ அமைக்க முயன்றதுவும் இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
***
இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்.
பல மில்லியன் இந்து மற்றும் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். நவகாளியில் மட்டுமே நான்கு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.
இருபுறமும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள், தேசப் பிரிவினையின் காரணமாக ஏறக்குறைய பத்தொன்பது மில்லியன் பேர் (1.9 கோடி) தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானார்கள்.
பஞ்சாப் பகுதியில் 1951-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 14.5 மில்லியன் பேர்கள் எல்லைகளைக் கடந்தார்கள் (இரு புறமும்). கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஏறக்குறைய 3.5 மில்லியன் இந்துக்கள் இந்தியப் பகுதிக்கு அகதிகளாக வந்தார்கள். ஆனால் வெறும் ஏழு இலட்சம் முஸ்லிம்கள் மட்டுமே கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்கள் தாருல்-ஹரப்பான இந்து இந்தியாவை விட்டுத் தங்களின் கனவு தேசமான இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு விருப்பத்துடன் மட்டுமே சென்றார்கள்.
அவ்வாறு செல்ல விரும்பாத முஸ்லிம்களை பெரும்பாலும் எவரும் இந்துப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலையோ வேறு. முஸ்லிம் லீகும் பிற இஸ்லாமிய இயக்கங்களும் திட்டமிட்டுத் தங்களின் பகுதியிலிருண்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை படுகொலைகள் செய்து விரட்டியடித்தார்கள்.
பிரிவினை காரணமாக இந்துக்களும், சீக்கியர்களும் இழந்த சொத்துக்கள் முஸ்லிம்களின் சொத்து மதிப்பினை விடவும் பல மடங்கு அதிகமானவை.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இந்து வணிகர்களும், சீக்கிய விவசாயிகளும் தங்களின் கடின உழைப்பு காரணமாக செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.
குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த இந்துக்களின் கட்டுப்பாட்டில் ஏறக்குறைய 80 சதவீத வளம் இருந்தது. வங்காள நகரங்களில் இருந்த பல கட்டிடங்களும், கிராமப்புற நிலங்களும் என 85 சதவீத செல்வம் இந்துக்களுக்கு உரிமையாக இருந்தது.
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவர்கள் வெறும் 8.2 சதவீதமே இருந்தாலும், அந்தப்பகுதியின் 80 சதவீத வரி அவர்களால் மட்டுமே அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்டது.
பிரிவினைக்கு முன்னர் லாகூரிலிருந்த 80 சதவீத சொத்துக்கள் முஸ்லிம்களல்லாதோர் வசமே இருந்தன. இந்த சொத்துக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கவே முஸ்லிம் லீக் பல பொய்ப் பிரசாரங்களையும், பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் திட்டமிட்டுத் தூண்டியது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.
(தொடரும்)