நல்லூர் பகுதியின் யுவதி ஒருவரைத் திருத்துவதற்காக அந்த யுவதியின் தந்தை மேற்கொண்ட நடவடிக்கையில் இரு உயிர்கள் பலியாகின.
நல்லூர் முருகன் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் வசித்து வரும் யுவதி தான் வளர்த்து வந்த இரு நாய்களினால் பெருமளவு பணத்தை செலவு செய்ததை பொறுக்க முடியாத தந்தை அந் நாய்களுக்கு நஞ்சு வைத்து உயிரிழக்க செய்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி சுமார் 20 ஆயிரம் ரூபா மதிக்கத்தக்க நாய்க் குட்டி ஒன்றை அண்மையில் வாங்கியுள்ளார்.
அத்துடன் தான் இன்னொரு நாயையும் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். குறித்த நாய்கள் வளர்ப்பதற்காக குடும்பமாக தடுப்பு ஊசி போட வேண்டும் என தெரிவித்து யுவதி தந்தையை தொல்லைப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து யுவதியும் யுவதியின் தாய், தந்தை மற்றும் இரு தம்பிகளுமாக ஊசி போட்டுள்ளனர்.
ஓய்வுதியரான தந்தை யுவதி நாய்களின் மேல் வைத்தி பாசத்தைக் பல தடவை கண்டித்தும் யுவதி கேட்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இரு நாய்களுக்கும் தனித் தனி கூடு செய்வதற்கான செலவும் தந்தையின் பணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மேலும் தந்தை கோபமுற்றிருந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தந்தையின் நண்பர் வீட்டுக்கு வந்த போது யுவதி வளர்த்த நாய் அவரை கடித்துக் குதறியுள்ளது.
இதனையடுத்து அங்கு யுவதிக்கும் தந்தைக்கும் இடையில் கடும் சண்டை தோன்றி தந்தையால் யுவதி தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இருந்தும் யுவதி திருந்தாத காரணத்தால் குறித்த தந்தை திட்டமிட்டு கடந்த சனிக்கிழமை இரவு நாய்களுக்கு நஞ்சு கலந்த உணவை போட்டுள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை இருநாய்களும் இறந்து கிடந்த போது யுவதி அதிர்ச்சியுற்று கத்தியுள்ளார். யாரோ இறந்து விட்டதாக நினைத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்த போது நாய்கள் இறந்து கிடந்துள்ளது.
பாம்பு கடித்ததாக தந்தை அதை சமாளித்து விட முற்பட்ட போது யுவதி சந்தேகமடைந்து விலங்கு மருத்துவரை அழைத்து வந்து காட்டியுள்ளார்.
நாய்கள் நஞ்சு வைத்து கொலை செய்யப்பட்தை அவர் தெரிவித்த போது அங்கு பெரும் சண்டை மீண்டும் உருவாகியது, அத்துடன் யுவதி கிணற்றினுள்ளும் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்டார்.
ஒரு வழியாக அயலவர்கள் சேர்ந்து யுவதியை வெளியே கொண்டு வந்து விட்டவுடன் யுவதி வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரியவருகின்றது.
இன்னும் யுவதி வீட்டிற்கு வரவில்லை எனவும் யுவதியின் நண்பி வீட்டில் குறித்த யுவதி தங்கியுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.