ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ (fast and furious’)  படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ திரைப்படம்.

பியூ­ரியஸ் 7 திரைப்­படம் கடந்த 2 ஆம் திகதி வெளி­யா­கி­யது. போல் வோக்­கரின் (Paul Walker)  மறைவின் பின்னர் வெளி­யான இப்­படம்  அவரின் ரசி­கர்­க­ளி­டத்­திலும் அதிக எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

fast-and-furious-2001-06-gரிலீஸான இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளிக் குவித்திருக்கிறதாம். வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற ஸ்டார்களுக்காக மட்டுமில்லை; படத்தில் ‘வ்ர்ர்ரூம்… வ்வ்ர்ர்ர்..ரூம்’ எனக் கிளம்பும் கார்களுக்காகவும் தியேட்டரில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது.

965032‘மச்சான்… ஆஸ்டன் மார்ட்டின்டா… மஸராட்டி டா… ஆடி டா!’ என்று படத்தில் கார்களைப் பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் கார் ஆர்வலர் நீங்கள் என்றால், உங்களுக்கு ஒரு சோகமான செய்தி.

படத்தில் பறந்து பறந்து சாகசங்கள் செய்த கார்கள் அனைத்தும், இப்போது அடித்து நொறுக்கப்பட்டு, பழைய இரும்புக் கடைகளில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன.

இதில் விமானத்திலிருந்து பாராசூட்டில் இறங்கும் காட்சியில் மட்டும் 40 கார்கள் கண்டம் செய்யப்பட்டதாம். கண்டம் செய்யப்பட்ட கார்களின் மெட்டல் பாகங்களை எப்படி டிஸ்போஸ் செய்கிறார்கள்?

இதுபற்றி, இந்தப் படத்துக்காக கார்களை ஒருங்கிணைத்து உதவி புரிந்த கார் விற்பனையாளர் ஃப்ரான்சிஸ் என்பவர் சொல்கிறார்.

‘‘நான் ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு கார் சப்ளை செய்திருக்கிறேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 கார்கள் டேமேஜ் ஆகிவரும்.

நாங்கள் டேமேஜ் ஆன கார்களை ‘டோ’ பண்ணி இங்கு எடுத்துவந்து, முழுதாக ரெடி பண்ணி, இங்கேயே மலிவான விலைக்கு விற்றுவிடுவோம். இல்லையென்றால், வேறு படங்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

car damege500இப்படி எங்களிடம் ரெடியாகும் கார்களுக்கு இங்கே லோக்கல் ஜங்க் யார்டுகளிடமும், பழைய கார் மார்க்கெட்டிலும் நல்ல வேல்யூ உண்டு.

ஆனால், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ (fast and furious’) படத்தின் தயாரிப்புக் குழு, ‘சேதமடைந்த இந்த கார்களைத் திரும்பவும் ஆர்டர் செய்து யாருக்கும் விற்க வேண்டாம்.

ஏனென்றால், மக்கள் விபத்தான கார்களை ஓட்டுவது ஆபத்தில் முடியும்’ என்று கடுமையாக எச்சரித்து விட்டதால், இந்த கார்கள் இனி வெறும் தகரம்தான்!’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார்.

car damege500aஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், புகாட்டி வெய்ரான், மஸ்டாங், ஆடி, மஸராட்டி என்று ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ 7-ம் பாகத்தில், கண்டம் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் மொத்தம் எத்தனை தெரியுமா?

ஜஸ்ட் 230 கார்கள்!

– தமிழ்

Furious 7 – Official Trailer (HD)

See You Again (Paul Walker Tribute) Fast And Furious 7 (In Memory of Paul Walker)

Share.
Leave A Reply