தம்புள்ள வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் தனது காதலியைப் பார்க்க வைத்தியர் வேடமிட்டுச் சென்ற 22 வயது இளைஞரொருவரை தம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் வைத்தியர் அடையாள அட்டை, ஸ்டெதெஸ்கோப் ஆகியவற்றுடன் தம்புள்ள வைத்தியசாலையில் நடமாடியபோது கைது செய்யப்பட்டார்.
மெதிரிகிரிய திஸ்ஸபுரயைச் சேர்ந்த இந்த இளைஞர் பெண்கள் சத்திர சிகிச்சை வார்ட்டுக்கருகில் நடமாடிக் கொண்டிருந்த போது வைத்தியசாலை வைத்தியரொருவர் இவரை இடைமறித்து விசாரணை செய்துள்ளார்.
அப்போது இவர் தாம் வைத்தியரெனவும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்று தாம் வைத்தியரென வழங்கிய அடையாள அட்டையையும் ஸ்டெதஸ் கோப்பையும் காண்பித்துள்ளார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட வைத்தியர் பொலிஸாருக்கு அறிவிக்கவே தம்புல்ல பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.