மாத்தறை தெனியாய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்குருபனாகல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி ஓலகந்த என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளமொன்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து 15.04.2015 அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை மற்றும் ஐந்து பேர் விபத்தின் போது காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.