ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 2 படத்தின் பிஸினஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.
இந்தப் படத்தை நீ நான் என்று முட்டி மோதி வாங்கியுள்ளனர். அட, சிலர் பலத்த சிபாரிசெல்லாம் பெற்று வந்து படத்தை வாங்கியுள்ளனர். இந்தப் படத்துக்கு ராகவா லாரன்ஸ் செலவழித்த தொகை ரூ 20 கோடி. ஆனால் இதுவரை ஆகியுள்ள பிஸினஸ் மட்டுமே 55 கோடி ரூபாய்.
எல்லா ஏரியாவிலுமே நான்கைந்து விநியோகஸ்தர்கள் முட்டி மோதி இந்தப் படத்தை வாங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கியுள்ளனர்.இன்றைய நாளில் மினிமம் கியாரண்டியில் லாரன்ஸ் மாதிரி நடிகர்கள் படம் பிஸினஸ் ஆவது மிகப் பெரிய சாதனை.படத்தின் சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமைகள், பிற மாநில உரிமைகள் எல்லாமாக ரூ 55 கோடியை ரிலீசுக்கு முன்பே குவித்திருக்கிறது காஞ்சனா 2.படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது. ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது