இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது.
கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும்.
அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது.
சமலி பெனாண்டோ, 1979 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது. அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி)
(what a beautiful girl)
சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சட்டத்தரணியான சமலி பெனாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.
சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மன நேயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மன நேயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
சமூகத்தில் மன நேயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார் .
தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது
18-04-2014