மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.
கிரானை சேர்ந்த டினோரஞ்சி முத்துக்கிருஸ்ணன் மூன்று குழந்தைகளையும் தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரன் மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளனர்.
இந்த குழந்தைகள் போதனா வைத்தியசாலையின் சிசுக்கள் விசேட சிகிச்சை பிரிவு, சிசுக்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா கடம்பநாதன் தெரிவித்தார்.
இதேவேளை குழந்தைகளை பிரசவித்தவரில் ஒருவரான தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரனின் குடும்பம் வறுமையான நிலையில் உள்ளதால் அவருக்கு உதவ விரும்புவோர் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.