மறித்த போதும் நிற்காமல் சென்றவர்களை துரத்தி சென்ற பொலிஸார் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று மாலை யாழ்.போக்குவரத்து பொலிஸார் சிறிய ரக வாகனம் ஒன்றினை மறித்த போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர்.

இதனால் அவர்களை மடக்கிப்படிப்பதற்காக பின்னால் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் பருத்தித்துறை வீதி வழியாக தமது அதிவேக மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றுள்ளனர்.

எனினும் கல்வியங்காட்டு சந்திக்கு அருகில்  குறித்த சிறிய ரக வாகனத்தை பொலிஸார் முந்த முற்பட்ட வேளை வாகன சாரதி வாகனத்தை சிறிதாக மாற்றுத்திசைக்கு திருப்பியுள்ளார். இதனால் செய்வதறியாது  நிலைகுழைந்த பொலிஸார் வீதியில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸார் யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

எனினும் குறித்த வாகனத்தினை செலுத்தி வந்தவர் தப்பிச்சென்றுவிட்டார் என்பதோடு இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் துரத்தி சென்ற போதிலும் பொலிஸார் வாகனத்தின் இலக்கத்தை குறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply