‘உன்ன எனக்கு பிடிக்கல… அது ஏன்னு தெரியலடா…!’ என்ற ரீதியில் திருச்சி மாணவி ஒருவர் வாலிபர் ஒருவரிடம் பேசும் ஆடியோ ‘வாட்ஸ்–அப்’பில் வேகமாக பரவி வருகிறது.
தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘வாட்ஸ்–அப்’ இன்று பலரின் அந்தரங்க வாழ்க்கையையும் தோலுரித்து, வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது.
இன்று பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், கூலி வேலை செய்வோர் என அனைத்து தரப்பினர் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது.
அதில் கேமரா, வாய்ஸ் ரெக்கார்டிங் என பல வசதிகள் உள்ளன. படங்கள், உரையாடல்களை உடனே அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்-அப் உள்ளது.
வாட்ஸ்–அப்பில் பல குரூப்கள் இருப்பதால், ஒரு குரூப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்கும் தகவல் உடனே மற்ற குரூப்களுக்கும் காட்டுத் தீயாக பரவி விடுகிறது.
சமீபத்தில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் பெண் போலீசுடன் பேசும் காதல் உரையாடல் வாட்ஸ்–அப்பில் பரவி காவல்துறை வட்டாரத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் தற்போது திருச்சி கல்லூரி மாணவி ஒருவருடன், அவரது இரு காதலர்கள் பேசும் உரையாடல் மற்றும் படங்கள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. தற்போது திருச்சியில் ஹாட் டாக்கே இந்த உரையாடல் தான்.
அந்த உரையாடலில், ஒரு வாலிபர், ”ஆம்பள பசங்க பாவம்” என உருக, ”ஆமா…, உன்ன எனக்கு பிடிக்கல… அது ஏன்னும் தெரியலடா” என்று கல்லூரி மாணவி சோகமாக கூறுவதில் தொடங்கி மிக சுவாரஸ்யமாக நீள்கிறது அந்த உரையாடல்.
இதன் உச்சமாக, கூடுதல் இணைப்பாக கல்லூரி மாணவியும், வாலிபரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வேறு அதில் பரப்பப்பட்டு வருகிறது.
இதை செல்லர்கள் தங்களது தோழன், தோழிகளுக்கு குரூப் குரூப்பாக பதிவேற்றம் செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.
திருச்சி கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவரும், வாலிபரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றும் தனிமையில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்தும் வந்துள்ளனர்.
திடீரென அந்த வாலிபரை கல்லூரி மாணவிக்கு பிடிக்காமல் போக, வேறொரு வாலிபரை மாணவி காதலித்து இருக்கிறார். மேலும், தனது பழைய காதல் பற்றி புதிய காதலரிடம் மாணவி மறைக்காமல் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், இந்த விவகாரம் முதல் காதலனுக்கு தெரிய வர, மாணவி தன்னுடன் எடுத்துக் கொண்ட படங்களோடு மாணவியின் புதிய காதலர் வீட்டிற்கு அதிரடியாக செல்கிறார் பழைய காதலர்.
அங்கு, புதிய காதலரின் அம்மாவிடம் மாணவி தன்னுடம் எடுத்து கொண்ட படங்கள் அனைத்தையும் மிகவும் சீரியசாக காட்டுகிறார்.
அதன் பின், மாணவிக்கு அங்கிருந்தே போன் செய்யும் முதல் காதலன், ”உன் வீட்டிற்கு வரப்போகிறேன்… உன் அப்பாவிடம் நாம் எடுத்து கொண்ட படங்களை எல்லாம் காட்டப்போகிறேன்…
உன் அப்பா தூக்கில் தொங்கட்டும்…’’ என ஆவேசமாக பேசுகிறார். ‘‘தயவு செய்து வீட்டிற்கு மட்டும் வந்து விடாதே’’ என அந்த மாணவி முதல் காதலனிடம் கெஞ்சுகிறார்.
அதன் பின்னர் அந்த மாணவியின் தோழி ஒருவரும் முதல் காதலனிடம் சமாதானம் பேசுகிறார்.
அதன்பின் புதிய காதலரும், ”என்னை ஏன் ஏமாற்றினாய்?” என மாணவியிடம் கேட்கிறார். இதன் பிறகு புதிய காதலரின் அம்மா அந்த மாணவியிடம் பேசுகிறார்.
அப்போது, ”இரண்டு பேரையும் விட்டு விட்டு படிக்கிற வேலையை பாரும்மா.. உனக்கு வேற ஒரு நல்ல பையனா நானே பார்க்கிறேன்” என்று நீண்ட அறிவுரை கூறுகிறார்.
அதன் பிறகு முதல் காதலர், ”இப்போ பேசுறத எல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்… இதையும் நீ என்னோட எடுத்த போட்டோவையும் நம்ம காலேஜ் குருப்புல போட போறேன்” என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
தற்போது வாட்ஸ் அப்பில் முதல் காதலன் அந்த உரையாடலையும், படங்களையும் பதிவேற்றி உள்ளார். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது திருச்சி கல்லூரி மாணவிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
படிக்கிற காலத்தில் காதலில் விழும் மாணவ, மாணவிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையட்டும்.