உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர ஆயுதப் படையின் பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா.

விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்பு களுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா வில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங் கலீபூ   என்ற ஆண் வெள்ளை காண்டா மிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டா மிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றில் ஒன்று கலிபோர் னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன.

இது தவிர மீதமுள்ள மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. கென்யாவில் உள்ள மூன்று வெள்ளைக் காண்டாமிருகங்களில் ஒன்று ஆண்.

இந்நிலையில் செயற்கை முறையில் கருவுறச் செய்யும் முயற்சிகள் மூலமே அபு+ர்வ வெள்ளை காண்டாமிருக இனத்தைக் காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் உலகத் தின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு 24 மணி நேர ஆயுதப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக காண்டாமிருகங்களின் ஆயுட் காலம் 50 ஆண்டுகள் ஆகும். தற்போது கென்யாவில் உள்ள ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு தற்போது 43 வயது ஆகிறது.

எனவே, மீதமுள்ள ஆண்டுகளில் அதன் மூலம் செயற்கைக் கருவூட்டல் முறையில் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply