ஆண், பெண் பேத­மின்றி, இன்று பல ரும் மூட்டுப் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுக்­கி­றார்கள். இதுபற்றி விளக்­கு­கிறார் சென்னை  செட்­டி­நாடு மருத்­து­வ­மனை குழு­மத்தைச் சேர்ந்த டொக்டர் வெங்கட­ராமன்.

மூட்­டுக்­களில் ஏற்­படக் கூடிய முக்­கிய பிரச்­சி­னைகள் இரு வகை­யா­னவை. ஒன்று, மூட்டு தேய்­மானம். இரண்­டா­வது, விபத்துக்களால் மூட்­டு­களில் ஏற்­படும் பாதிப்­புகள்.

முதி­ய­வர்கள் மட்­டு­மன்றி இளம் வய­தி­னரும் இந்­நோயால் அவ­தி­யு­று­கின்­றனர். காரணம், உணவுப் பழக்கம் மற்றும் மாச­டைந்த சூழல்.

இளம் வய­தினர் பலரும் அள­வுக்­க­தி­க­மான உடல் எடையை சுமப்­பதால், மூட்டு எலும்­பு­க­ளுக்கு இடையே உள்ள சவ்­வுப்­ப­கு­திகள் தேய்ந்து எலும்­புகள் ஒன்­றோ­டொன்று உராயத் தொடங்கும்.

இதனால் மூட்டு வலி உரு­வா­கின்­றது. சில­வே­ளை­களில், கட் டுக்­கோப்­பான உடல்­வாகு உடையவர்களுக்கும் பரம்­பரை கார­ண­மாக மூட்டுச் சவ்­வுகள் வலு­வி­ழந்து விரை­வி­லேயே தேய்ந்துவிடும்.

மூட்­டு­வ­லியை அலட்­சி­யப்­ப­டுத்தியவர்கள், மூட்டு வாத­நோயால் பாதிக்­கப்­பட்­டவர்கள் மற்றும் விபத்தில் அடி­பட்­ட­வர்­க­ளுக்கு மூட்டு மாற்று சத்­திர சிகிச்­சையே தீர்வு.


மூட்டுத் தேய்­மா­னத்தில் (Ostéoporose arthrite) இரு­வ­கைகள் உண்டு.
ஒன்று ‘ருமாடைட் ஆர்த் தரைட் டீஸ் (Rheumatoid Arthritis)

http://www.dreamstime.com/royalty-free-stock-photo-rheumatoid-arthritis-hand-image22366005

இரண்­டா­வது ‘ஒஸ்­டியோ ஆர்த்­த­ரைட்டீஸ்’ (Osteoarthritis)   ஒருவர், ‘ருமாடைட்’ காய்ச்­சலால் பாதிக்கப் படும்­போது, உட­லுக்குள் சில கிரு­மிகள் புகுந்து விடு­கின்­றன.

http://www.dreamstime.com/royalty-free-stock-photography-image25432147

இவை இரு­த­யத்­தையும், மூட்டுகளை­யுமே குறி­வைத்துத் தாக்கும். இதனால் மூட்டு தேய்­மானம் வருகி­றது.

இதை ஆரம்ப நிலை­யி­லேயே கண்­ட­றிந்தால் சரி­யான சிகிச்சை மூலம் எளிதில் குணப்­ப­டுத்­தி­விட முடியும். 21 வய­துக்குப் பின் ருமாட்டிக் காய்ச்சல் வர வாய்ப்­புகள் மிகக் குறைவு.

ஆர்த்­த­ரைட்டீஸ் எல்லா வய­தி­னருக்கும் பொது­வாக வரக்­கூ­டி­யது. மூட்­டு­களில் வலி, வீக்கம், மூட்டுகளை அசைக்­கும்­போது சத்தம் கேட்­பது என்­ப­னவே இதன் அறி­கு­றிகள்.

இத்­த­கைய பாதிப்பு ஏற்பட்டால் உட­னடியாக வைத்­திய பரி­சோ­தனை செய்­வது அவ­சியம்.

ஆரம்ப நிலை­யி­லேயே ஒஸ்­டியோ ஆர்த்­தரைட் டீஸ் (Osteoarthritis) கண்­ட­றி­யப்­பட்டால், எடைக் குறைப்பு பயிற்சி, உடற்­ப­யிற்சி போன்ற சாதா­ரணப் பயிற்­சிகள் மூலமே குணப்­ப­டுத்தி விடலாம்.

அலட்­சி­யப்­ப­டுத்து பவர்­க­ளுக்கு, மருந்து மாத்­தி­ரை­க­ளுடன் ‘பிசியோ தெரபி’ எனும் இயன்­முறை சிகிச்சையும் வழங்­கப்­படும்.

மூட்டுத் தேய்­மா­னத்­திற்கு உட­ன­டி­யாக சிகிச்சை எடுத்­துக்­கொள்­ளா­விடில், இயல்­பான நிலை­யி­லி­ருந்து பாதம் வில­கத்­தொ­டங்கும். இவ்­வா­றான பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு ‘ஒஸ்­டியோ ஓட்­டமி’ எனும் சத்­திர சிகிச்சை மூலம் பாதத்தை நேராக்­கி­வி­டலாம்.

இது­போ­லவே, மூட்­டுக்­களில் தேய்­மானம் கூடக் கூட, பாதங்­களின் அமைப்பும் கோண­லா­கி­விடும். இத னால் முது­கு­வ­லியும் ஏற்­ப­டலாம். இந்த நிலை­யா­னது, உட­ன­டி­யாக மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்­பதைத் தெரி­விக்கும் அபாய சமிக்ஞை ஆகும்.

மூட்டு மாற்று சத்­திர சிகிச்சை

மூட்டு எலும்பு தேய்­மானம் அடைந்த ஒரு­வ­ருக்கு மூட்­டு­க­ளுக்கு இடை­யே­யான சவ்­வு­க­ளுக்குப் பதி லாக ‘பொலி எதி­லி’னால் ஆன செயற்கைச் சவ்வு பொருத்­தப்­ப­டு­கி­றது.

தேய்­மா­னத்தின் அளவைப் பொறுத்து செயற்கைச் சவ்வின் அளவும் வேறு­படும். இடுப்பு, கால் மற்றும் தோள் போன்ற பிர­தான மூட்டுப் பகு­தி­க­ளி­லேயே இந்த சிகிச்சை செய்­யப்­படும்.

இந்­நாளில் பலரும் நீரி­ழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இத­யத்தில் பாதிப்­புகள் போன்ற நோய்க ளால் பீடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களும் கூட, தேவைப் பட்டால் மூட்டு மாற்று சிகிச்சை செய்­து­கொள்­ளலாம். இவர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­கா­க­வென்றே, தற்­போது மூட்டு மாற்று சிகிச்­சையில் நவீன மருத்­துவத் தொழில்­நுட்ப உப­க­ரணங் கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதனால், நாம் வழங்கும் மூட்டு மாற்று சத்­திர சிகிச்­சையில், 99 சத­வீத வெற்றி உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.

மிகச் சில வேளை­களில், பிறக்­கும்­போதே குழந்­தை­களின் இடுப்­பெ­லும்­புகள் கோண­லாக இருக்­கலாம். ஆனால், இவர்கள்  இந்தப் பிரச்­சி­னையால்   பாதிக்­கப்பட் டிருக்­கி­றார்கள் என்­பதை, பிறந்த சில மாதங்க­ளுக்குள் அவ்­வ­ளவு  எளி­தாகக் கண்­ட­றிந்­து­விட முடி யாது.

சாதா­ர­ண­மாகக் குழந்தை நடக்கத் தொடங்கும் காலங்­களில், மற் றைய குழந்­தை­க­ளை­விட நடக்கச் சிரமப்­படும். இதை அவ­தா­னத்­துடன் பார்த்துக் கண்­டு­பி­டித்தால், இடுப்பு எலும்பு விலகி இருப்­பது உறுதியானால், அந்தக் குழந்­தைக்கு மூட்டு எலும்பு சத்­திர சிகிச்சை செய்­யலாம்.

ஆரம்ப வய­து­களில் கண்­ட­றி­யாமல் விட்­டி­ருந்தால், வளரும் பரு­வத்தில் அந்தக் குழந்தை நடக்­கவோ, தரையில் உட்­கா­ரவோ முடி­யாமல் போகலாம்.

இந்த நிலையில் உள்­ள­வர்­க­ளுக்கு  ‘எஸ்.ஆர்.ஓ.எம்’ என்ற இடுப்பு எலும்பு மாற்று சத்­திர சிகிச்சை மூலம் குண­ம­ளிக்­கலாம். மருத்­துவ விஞ்­ஞானம் வெகு­வாக வளர்ந்­து­விட்ட இந்­நாட்­களில், இந்த சத்­திர சிகிச்­சையும் மிக எளி­தாக மாறி­விட்­டது.

இதில், இடுப்பு எலும்பு எந்தத் திசையில் இருக்க வேண்­டுமோ அந்தத் திசையில் டைட்­டா­னி­யத்­தா­லான செயற்கை கருவி பொருத் தப்­ப­டு­கி­றது. இது சாதா­ரண இடுப்பு எலும்பு போலவே செயற் படும்.

வாழ்நாள்  முழு­வதும் எவ்வித பிரச்­சினையையும் ஏற்­ப­டுத்­ தாது. முன்பு, இது­போன்ற சிகிச்­சையைச் செய்து கொண்­ட­வர்கள் எழுந்து நடக்க ஐந்து மாதங்கள் ஆகும். இன்றோ, சிகிச்சை முடிந்த இரண்டே வாரங்­களில் நடக்க ஆரம்­பிக்­கலாம்.

அது­போ­லவே, முன்­னைப்­போல, பிளாஸ்டிக் மற்றும் உலோ­கங்­களால் ஆன செயற்கை மூட்­டுகள் தற்போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அவற்­றுக்குப் பதி­லாக ‘ஒக்­சீ­னியம்’ என்ற பொரு­ளா­லேயே செயற்கை மூட்­டுகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. இதனால், மூட்டு மாற்று சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்கள், மருத்­து­வ­ம­னையில் தங்­கி­யி­ருக்கும் கால அளவு குறைந்­து­விட்­டது.

இளம் வயதில் மூட்டு மாற்று சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு ‘வித் அவுட் சிமெண்ட்’ என்ற அதி­ந­வீன சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. இதன் கால அளவு மிக அதிகம். கிட்டத்தட்ட ஆயுட்காலம் முழுவதும் இது நன்றாக செயல்படும்.

பெண்கள்தான் மூட்டு வலியால் அதிகளவில் அவதியுறுகின்றனர். பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் ஈஸ்ட்ரோஜன் சுரப்புகளில் சமச்சீரற்ற நிலை தோன்றுவதால், உடலில் கல்சியத்தின் அளவு குறைந்துவிடுகிறது.

இதனால் மூட்டுகள் பலவீன மடைகின்றன. மாதவிடாய் நின்ற பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி கல்சியம் மாத்திரைகளைப் பயன் படுத்துவதால், இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

டாக்டர் வெங்கட்ராமன்
+91 44 4741 1000
cssh@chettinadhealthcity.com (link sends e-mail)

Share.
Leave A Reply