jinnah-225x300இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த மானுட குல அழிவிற்கும், வன்முறைக்கும் முஸ்லிம்களே காரணமாக அமைந்தார்கள்.

இந்தியாவைப் பிரித்து தனிநாடு அமைக்கும் கோரிக்கை அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனை விரைந்து அடையும் வழியாகவே வன்முறை அவர்களால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.

பாகிஸ்தானை அடையும் நோக்கத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட வன்முறையானது, நாடு துண்டாடப்பட்ட பின்னரும்  தொடர்ந்து நடந்தது.

முகமதலி ஜின்னாவால் துவங்கப்பட்ட நேரடிப் போராட்ட கூக்குரலும், மசூதிகளின் வாயிலாக பரப்பப்பட்ட பொய்த் தகவல்களும், புனிதப் போருக்கான (ஜிகாத்) அறைகூவல்களும், முகமது நபி “பாதர் போரில்” (Battle of Badr) பெற்றதாகக் கூறப்பட்ட வெற்றியைப் பற்றிய பிரசாரங்களும் முஸ்லிம்களிடையே ஆவேசத்தைத் தூண்டின என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை.

பிரிவினைக்குப் பிறகு பெற்ற தங்களின் புதிய இஸ்லாமிய  ‘புனித நாடான’ (Land of Pure) பாகிஸ்தானிலிருந்து அசுத்தமான காஃபிர்களை விரட்டியடிக்கும் வெறியும் முஸ்லிம்களின் வன்முறைக்குப் பின்னணியில் இருந்தது.

‘இறைதூதர்’ முகமது நபி அரேபியாவின் குடிகளான யூதர்களையும், சிலை வழிபாட்டாளர்களான காஃபிர்களையும் கொன்றழித்து இஸ்லாமிய நாட்டையை அரேபியாவில் நிர்மாணித்ததற்கு இணையாகவும் இது முஸ்லிம்களால் நோக்கப்பட்டது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 1947 பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் இந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்தது.

கிழக்கு பாகிஸ்தானில் (கிழக்கு வங்காளம்) பிரிவினையின் போது வன்முறை பெருமளவில் தடுக்கப்பட்டாலும், இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் வன்முறை மீண்டும் பிப்ரவரி 1950-இல் மீண்டும் அரங்கேறியது.

அதன் பின்னணியில், தோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் காஷ்மீரைக் கைப்பற்றும் முயற்சி இருந்தது.

தோல்வியில் அவமானமடைந்த பாகிஸ்தானிய பத்திரிகைகளும், வானொலியும், ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை  ‘தேச துரோகிகள், எதிரியின் ஏஜெண்டுகள், ஐந்தாம்படையினர்…’ எனப் பல்வேறு பெயரிட்டு அழைத்துப் பொய்ப்பிரசாரத்தை ஆரம்பித்தார்கள்.

3BattleofBadr624A.D.-300x240

பிப்ரவரி 6, 7 தேதிகளில் பாகிஸ்தானி ரேடியோ பாகிஸ்தானியர்களிடையே,  “மேற்கு வங்காளத்தில் (இந்தியப் பகுதி) முஸ்லிம்கள் இந்துக்களால் மிகவும் கொடுமையாக நடத்தப்படுகிறார்கள்.

அதனை முஸ்லிம்கள் எதிர்த்துப் போராட வேண்டும்” எனவும் அறிவித்தது. அது போன்ற பொய்ச் செய்திகள் கிழக்கு பாகிஸ்தானியப் பத்திரிகைகளால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன.

பாகிஸ்தானி ரேடியோ  ‘கல்கத்தாவில் பத்தாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக’ அறிவித்த செய்தியை வெளியிட்ட கிழக்கு வங்காளப் பத்திரிகையான  ‘பஸ்பன் (Pashban)’,  ‘கல்கத்தாவில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக’ பொய்யாகத் திரித்து வெளியிட்டது.

எதிர்பார்த்தது போலவே இதுபோன்ற செய்திகள் கிழக்கு வங்காள முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தின.

அதைத் தொடர்ந்து மிகவும் பயங்கரமான வன்முறை கிழக்கு பாகிஸ்தானின் இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

பெருமளவிலான படுகொலைகளும், கற்பழிப்புகளும், பெண்களைத் தூக்கிச் செல்லுதலும், கூட்டம் கூட்டமான மதமாற்றங்களும், கொள்ளையும்,  தீவைப்புகளும் துவங்கின. அங்கு நிகழ்ந்த அத்தனை கொடூரங்களைப் பற்றியும் இங்கு எழுதிவிட இயலாது.

Partition-of-India

அதனையும் விட இந்திய அரசியல்வாதிகள் இத்தகைய கொடூரங்களை இந்தியர்களிடமிருந்து மறைத்ததுடன், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் நடந்த சம்பவங்களைப் பற்றிய பொய்த் தகவல்களையும் அள்ளி வீசினர்.

உதாரணமாக, கிழக்கு வங்காளத் தலைநகரான டாக்காவில் வெறும் 600-லிருந்து ஆயிரம் இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகத் இந்தியர்களிடையே அறிவிக்கிறார். ஆனால் உண்மை நிலவரமோ அதற்கும் பலமடங்கு மேலானது.

ராஜாபூர் பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 150 இந்துக்கள் கொல்லப்பட்டு, தப்பியவர்கள் உடனடியாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.

அதே ஜவஹர்லால் நேரு, இந்தக் கலவரங்களின் காரணமாக ஏறக்குறைய 1.5 மில்லியன் இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். இதுவும் ஒரு குறைத்துக் கூறப்பட்ட ஒரு தகவலே.

இந்துக்களோ அல்லது சீக்கியர்களோ தாங்களாகவே ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தக் கலவரத்தையும் முன்னின்று நடத்தவில்லை.

அது இந்தியப் பிரிவினைக்கு முன்னராக இருந்தாலும் சரி, பிரிவினைக்குப் பின்னரானாலும் சரி, அதுவே மறுக்கவியலாத உண்மை.

ஆனால் தங்கள் மீது முஸ்லிம்களால் திணிக்கப்பட்ட கலவரத்தை வேறு வழியின்றி எதிர்த்துப் போராடினார்கள். அதுபோன்ற எதிர்க்கலவரங்கள் கிழக்கு பஞ்சாப், டெல்லி, அல்வார் பகுதிகளில் மட்டுமே நடந்தன.

இந்தியாவில் பிற பகுதிகளில் இந்துக்கள் பெரும்பாலராக இருக்கும் பகுதிகளில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எவையும்  நடத்தப்படவே இல்லை என்பதும் மறுக்கவியலாத உண்மையே.

partition_women_20060703

ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இந்தக் கொடூரம் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண்கிறோம்.

வெல்லப்பட்ட காஃபிர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, அவன் மனைவி, மக்களை அடிமைகளாகப் பிடித்துச் செல்லவதற்கு அல்லாவே அல்லவா அனுமதியளித்திருக்கிறார்?

சிறிதும் மானுடத்தன்மையின்றி முஸ்லிம்கள் இதனையே திரும்பத் திரும்பச் செய்தார்கள்.  உதாரணமாக, இளம் இந்துப் பெண்களை காஷ்மீரில் கைப்பற்றிய பதான் முஸ்லிம்கள், அவர்களை தூக்கிச் சென்று பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்துச் சந்தையில் வைத்து விற்பனை செய்தார்கள்.

ஆனால் எந்த இடத்திலும் ஒரு சீக்கியனோ அல்லது இந்துவோ அவ்வாறு செய்ததற்கான தடயங்கள் எதுவுமில்லை.

பொதுவில் இந்துக்களும், சீக்கியர்களும் இந்தக் கலவரங்களின் போது மிகவும் கட்டுப்பாட்டுடனேயே நடந்து கொண்டிருப்பது காணக் கிடைக்கிறது.

இந்துக்களும், சீக்கியர்களும் கொடூரமாக கொல்லப்படுகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இல்லாத இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவிய அமைதியே இதற்கு உதாரணம். எனவே இத்தனை கொடூரங்களுக்கும் சந்தேகத்திற்கிடமின்றி முஸ்லிம்களே காரணகர்த்தர்கள்.

*

இன்றைக்கும் இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பகுதிகளிலிருந்து இந்துக்களை விரட்டியடிப்பதை முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டிருருப்பதனைக் காண்கிறோம்.

தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னெப்போதையும் விட இந்தியா ஒரு பெரும் ரத்தக்களறியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல என்றே கூறலாம்.

இதனைக் குறித்து பிறிதொரு சமயம் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை இங்கு அழுத்தவும்.

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

Share.
Leave A Reply