பாக்தாத்,
இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள்.
இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்திகாட்டி ‘நானூறு’ என்று அவள் பதில் அளிக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த சிறுமி வெறும் பாலைவனத்தில்தான் சுடுகிறாளா? அல்லது, எதிரே ஏதேனும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பது இந்த வீடியோவில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளமையாக காட்சி அளிக்க தினமும் பன்றி ரத்தத்தில் குளிக்கும் மொடல் (வீடியோ இணைப்பு)
19-04-2015
அமெரிக்காவில் மொடல் அழகி ஒருவர் இளமையாக காட்சி அளிக்க பன்றி ரத்தத்தில் குளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மொடல் அழகியான 19 வயது சேனல் தனது தோல் புத்துணர்ச்சி பெற பன்றியின் ரத்ததில் குளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது உடலில் சுருக்கங்கள் காணப்பட்டதால் தான் பன்றி ரத்தத்தில் குளிக்க தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகவும், தான் இந்த பன்றி ரத்தத்தை உள்ளூரில் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ரத்தத்தின் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை முகத்தை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.