கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை அவ்வளவு இலகுவாக யாராலும் மறந்து விட முடியாது.

தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’ போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது ஆர்.கேவுக்கு ஜோடியாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் இணையத்தில் வெளியிட்ட படமொன்றால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

நீது சந்திரா பிகினி உடை அணிந்து கடற்கரையோரத்தில் நிற்கும் தனது படத்தை டுவிட்டரின் ஊடாக பகிர்ந்தார்.

தனது பட த்துக்கு நல்ல வரவேற்பை எதிர்ப்பார்த்த அவருக்கு கிடைத்த து என்னமோ ஏச்சும் , பேச்சும் தான். பட த்தை பார்த்த ரசிகர்களில் பலர் நீது சந்திராவை சரமாரியாக திட்டித் தீர்த்து விட்டனர்.

ரசிகர்களின் பின்னூட்டல்களால் மனமுடைந்த நீதுஅந்த படத்தை இணைய தளத்திலிருந்து நீக்கினார்.

அதற்கு பின்னர் ரசிகர்களின் செயற்பாட்டுக்கும் கண்டம் தெரிவித்துள்ளார்.

“எனது தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. அதனால் இந்த உடை அணிய முடிகிறது. உங்களுக்கும் அதுபோல் தோற்றம் இருந்தாலும் நீங்கள் டு பீஸ் போட்டுக்கொள்ளுங்கள். எதற்கு பொறாமை படுறீங்க.

இனிமேல் இதுபோல் எதையும் உங்களுக்காக நான் பகிர மாட்டேன். என்னவொரு கெட்ட வார்தை, தாங்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

நீது சந்திரா இது போன்ற சிக்கலில் சிக்குவது இது முதற் தடவையல்ல, இதற்கு முன்னரும் சஞ்சிகையொன்றுக்கு பிகினி அணிந்து, கிறிஸ்கா குப்தா என்பவருடன் இணைந்து ஓரினச் சேர்க்கையை பிரதிபலிக்கும் வித த்திலான பட த்திற்கு போஸ் கொடுத்து சிக்கலில் சிக்கியிருந்தார்.

அவரது நடவடிக்கைக்கு அப்போதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

neetu-chandra_13350986529

1429259846_9719702_hirunews_neethusaaneetu-chandra_133509865516neetu-chandra_133509865210neetu-chandra_1335098655161neetu-chandra_13350986529neetu-chandra_13350986517neetu-chandra_13350986506neetu-chandra_13350986505neetu-chandra_13350986504neetu-chandra_13350986493

Share.
Leave A Reply