ஓக்போமோஸோ: பாம்புடன் உறவு வைத்து கொண்டதன் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக நைஜீரிய இளம்பெண் ஒருவர் கூறி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண் கெஹிண்டே அடெகோக்.
இவர், கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உடலுறவு வைத்து கொண்டதன் மூலம் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நான்காண்டுகளாக கெஹிண்டே அடெகோக் இரவு வேளைகளில் உறங்கும்போது, தொடர்ந்து தினந்தோறும் அவரது கனவில் ஒரு பாம்பு தோன்றுமாம். அந்த பாம்பு, திடீரென மனிதனாக மாறி அவருடன் உறவில் ஈடுபடுமாம்.
அதன்பின் பாம்பு ரூபமெடுத்து மறைந்து விடுமாம்.
கெஹிண்டே அடெகோக் கனவில் நடைபெற்ற இந்த தாம்பத்யத்தின் பலனாக தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறும் அவர், இதுநாள் வரை நான் வேறு எந்த ஆணுடனும் எனது படுக்கையை பகிர்ந்து கொண்டதே இல்லை என சத்தியம் அடித்து சொல்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி கெஹிண்டே அடெகோக் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அதிசயமாக கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பதைப்போல் கூர்மையான இரு பற்களும் இருந்துள்ளன.
ஒரே ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்ந்த அந்த குழந்தை கடந்த மார்ச் 29 ஆம் தேதி உயிரிழந்து இருக்கிறது.
இது பற்றி கெஹிண்டே அடெகோக் கூறும்போது, ”கடந்த 2014 அக்டோபர் மாத வாக்கில் என் வயிறு பெரிதாக இருப்பதையும் சில மாற்றங்களையும் நான் உணர்ந்தேன்.
இதை பார்த்த என் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் நீ கர்ப்பமாக இருக்கிறாயா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
நான் எந்த ஒரு ஆணுடனும் உறவு வைத்துகொள்ளாததால் நான் கர்ப்பம் அடையவில்லை என்று உறுதியாக நம்பினேன்.
ஆனாலும் பின்வரும் நாட்களில் நான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்தேன். அதை தொடந்து ஒரு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது நான் கருவுற்றிருப்பதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.
அதன்பின் நான் எவ்வளவோ கூறியும் எனது பெற்றோர் என்னை சந்தேகப்படுவதை நிறுத்தவில்லை. அதனால் நான் எனது வீட்டில் இருந்து வெளியேறினேன்.
அதன்பின் ஒயோ மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் அதன் தோல் பாம்பு தோல் போன்று இருந்தது. குழந்தையின் கீழ் தாடையில் இரண்டு கூறிய பற்கள் இருந்தது.
அதனால் பயந்துபோய் நான் குழந்தைக்கு பால் கொடுக்க தயங்கினேன். மேலும், குழந்தை பிறந்த பின்னர் என் கனவில் பாம்பு வரவில்லை” என்றார்.
நைஜீரிய மக்களுக்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீகத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், கெஹிண்டே அடெகோக் பாம்புடன் உறவு கொண்டதால் தான் குழந்தை பிறந்திருப்பதாக கூறும் விசித்திரத்தை என்னமோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் தான் பார்க்கின்றனர்.