வவுனியா பொது வைத்தியசாலையில் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது கந்தையா சிவசுப்பிரமணியம் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி இவர் கடந்த 13 நாட்களாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் 16-04-2015 அன்று நோயாளியின் சகோதரி யோகதாஸ் யோகேஸ்வரியின் வீட்டில் நோயாளி குணமாகி விட்டதாக தெரிவித்து ஒப்படைக்கப்பட்டார.;

ஆனால் அவர் குணமடையவில்லையென்றும் நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக தாங்கள் மீண்டும் இரவு 11.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளியை கூட்டி சென்றதாகவும்….

000b1வைத்தியசாலையில் வைத்தியர் நோயாளியை வார்ட்டில் அனுமதிக்க சிபாரிசு செய்த போதும் வார்ட்டில் உள்ள ஊழியர்கள் நோயாளியை அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிவித்த குடும்பத்தினர் நோயாளியை வார்ட்டில் அனுமதித்தே ஆகவேண்டும் என தாங்கள் கோரியதால் கோபமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் மனநோயாளியின் அக்காவாகிய யோகதாஸ் யோகேஸ்வரியை மனநோயாளிகள் வார்ட்டினுள் தள்ளி பூட்டி விட்டதுடன் தனது மகளை இரவு 12.00 மணி என்றும் பாராமல் வைத்தியசாலைக்கு வெளியே துரத்திவிட்டதாகவும் யோகதாஸ் யோகேஸ்வரி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் பொறுப்புடன் பதில் கூறவில்லையென்றும் யோகதாஸ் யோகேஸ்வரியின் மகனை படம் எடுத்ததற்காக பொலிசில் ஒப்படைக்கப்போவதாக அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்கு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சிலும் முறைப்பாடு செய்துள்ளதாக யோகதாஸ் யோகேஸ்வரி தெரிவித்தார்.

 

அவதானம்..! கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நூதன திருட்டு

Fd2f6d2fdf
கண்டி திகன நகரில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணொருவரிடம் நூதன முறையில் பெறுமதியான நகையை இருவர் திருடி பறித்து விட்டு தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

திகன நகரில் வீதியில்  இரண்டு  இலட்சம் பெறுமதியான நகையை அணிந்து நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 65 வயது பெண்னை தொடர்ந்து வந்த இருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்பெண்ணின் கையில் இருந்த பையை காட்டி “நாங்கள் ரகசிய குற்ற விசாரணை பிரிவை சேர்ந்தவர்கள், உங்கள் பையில் சட்டவிரோதமான பொருள் ஒன்று உள்ளது.

அதனை நீங்கள் மறைத்து எடுத்துச் செல்கின்றீர்கள் உங்களை விசாரிக்க வேண்டும்” என கூறி மடவளை -திகன வீதியில் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்துக்கு கூட்டி வந்துள்ளனர்.

அங்கு வந்து மறுபடியும் “நீங்கள் பையில் எடுத்துச் செல்லும் பொருள் சட்டவிரோதமானது என கூறியுள்ளனர். அதனை அப்பெண்மணி மறுத்த போது ” நாங்கள் உங்களை நம்பத் தயாரில்லை, நம்ப வேண்டுமென்றால் உங்களிடம் உள்ள பெறுமதியான பொருள் ஒன்றை இந்த அரிசியில் வைத்து சத்தியம் செய்யவும்” என அவர்களிடம் இருந்த அரிசி பெக்கட்டை கையில் வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply