புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவு மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி. 31 வயதான இவருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

docter priya1திருமணம் முடிந்த பிறகு இருவரிடையே தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் இருந்துள்ளது.இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.தொடர்ந்து தனது கணவர் டாக்டர் கமல் வேதியிடம் முரண்பாடு உண்டான நிலையில், மனம் வெறுத்து குடும்பம் நடத்த முடியாமல் பிரியா தவித்துள்ளார்.

இதனையடுத்து பிரியா, தனது கணவர் கமலின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். டாக்டர் கமலின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த பிரியா, அதில் ஏராளமான ஆண் ஓரினச்சேர்க்கை குறித்த படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன.

docter priya
மேலும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் தொடர்பு குறித்த தகவல்களும் அதில் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா கணவர் கமலுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் கமல் வேதி, பிரியாவுக்கு வரதட்சணை கொடுமையும் செய்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வந்துள்ளது. மிகுந்த மன நெருக்கடியிலேயே வாழ்ந்து வந்துள்ளார் பிரியா.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

உச்சக் கட்ட மனவேதனையில் இருந்த பிரியா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு, கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய போலீசார் ப்ரியாவை ரத்த வெள்ளத்தில் பிணமாக தனியார் ஹோட்டலில் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த அறையில் தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை தற்போது கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply