பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் பயன்­ப­டுத்­தப்­பட்ட பிளாஸ்ரிக் போத்­தல்கள் மூலம் படகு ஒன்றை நிர்­மா­ணித்­துள்­ளனர்.

காஸா பிராந்­தி­ய­மா­னது 2006 ஆம் ஆண்டு முதல் இஸ்­ரே­லினால் தரை மற்றும் கடலால் முற்றுகையி­டப்­பட்­டுள்­ளது.

எகிப்­து­ட­னான எல்­லை­யி­லுள்ள ரஃபா மட்­டுமே இஸ்­ரே­லிய படை­யி­னரின் முற்­று­கையில் இல்­லாத காஸா பகு­தி­யாகும்.

மேற்குப் புற­மா­க­வுள்ள மத்­திய தரைக்­க­டலில் 6 கடல் மைல் தூரம் மாத்­திரம் பலஸ்­தீ­னி­யர்கள் செல்ல முடியும்.

அதன்பின் இஸ்­ரே­லிய கடற்­ப­டை­யி­னரால் அவர்கள் மறிக்­கப்­ப­டுவர்.

9739121969-01-02-1இந்­நி­லையில், அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக பலஸ்­தீன இளை­ஞர்கள் சிலர் பிளாஸ்ரிக் போத்­தல்களால் படகை நிர்­மா­ணித்­துள்­ளனர்.

பாஹா ஒபெயத் (25) அவரின் சகோ­தரர்­களில் ஒரு­வ­ரான சட்­டத்­த­ரணி மொமஹட் ஒபெய்த் (25) மேலும் 3 நண்­பர்­க­ளுடன் இணைந்து இப்­ப­டகை நிர்­மா­ணித்­தனர்.

குப்­பை­க­ளி­லி­ருந்து சேக­ரிக்­கப்­பட்ட 1000 இற்கும் அதி­க­மான பிளாஸ்ரிக் போத்­தல்கள் இதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

9739121967-01-02-1இதன்­மூலம் மத்­திய தரைக்­க­டற்­ப­கு­தியில் சிறிது தூரம் உல்­லா­ச­மாக பயணம் செய்­வ­தற்கும் மீன்­பி­டிப்­ப­தற்கும் இவர்கள் இந்த படகை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

உலோ­கத்தின் மூலம் பட­கிற்­கான சட்­டத்தை உரு­வாக்கி அதை அடிப்­ப­டை­யாக கொண்டு போத்­தல்கள் பிணைக்­கப்­பட்­டுள்­ளன.

இப்­ப­டகை நிர்­மா­ணிப்­ப­தற்கு சுமார் 3 மாத­காலம் தேவைப்­பட்­ட­தாக பாஹா ஒபெய்த் கூறு­கிறார்.

“தினமும் 6 மணித்­தி­யா­லங்கள் மாத்­தி­ரமே எமக்கு மின்­சாரம் கிடைக்­கி­றது.

அதனால் இப்­ப­டகை செய்­வ­தற்கு சிறிது நீண்­ட­காலம் தேவைப்­பட்­டது.

இதற்காக சுமார் 500 டொலர்களை நாம் செலவிட்டுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 அடி நீளமான இப்படகை பார்வையிடுவதற்கு காஸா பிராந்திய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

boat_20042015

Share.
Leave A Reply