கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

flag-2
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும், சிறிலங்காவின் தேசியக் கொடியை ஒத்த சிங்கக்கொடிகள் காணப்பட்டன.

flag-3சிறிலங்காவின் தேசியக்கொடியில், தமிழ், முஸ்லிம் இனங்களை அடையாளப்படுத்தும், செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பகுதிகள் நீக்கப்பட்டு அந்தக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் தேசியக்கொடியின் வடிவமைப்பின் மாற்றம் செய்வது குற்றமாகும்.

flag-4இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

அந்த தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறித்தும் நீதிமன்றத்துக்கு காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்
23-04-2015

SRI LANKA-POLITICS-RAJAPAKSEஇலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக, கோத்தபாய ராஜபக்ச முன்னிலையானார்.

Gota-out-2அப்போது, அவரது சட்டவாளர்கள், கோத்தாவிடம் விசாரணை நடத்துவதற்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைய அவருக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பணியகத்தில் இருந்து கோத்தாபய ராஜபக்ச வெளியேறினார்.

gota-protest-2அங்கிருந்து அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்சவை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

gota-protest-1அதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து கோத்தாபய ராஜபக்ச வெளியேறியதும், அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் விஜேராம மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் இல்லம் நோக்கியும், மற்றொரு பிரிவினர் வெலிக்கடைச் சிறைச்சாலை நோக்கியும் பேரணியாகச் சென்றுள்ளனர்.

Share.
Leave A Reply