பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் காவலாளியும் உயிரிழந்த பெண்ணை சந்திக்கச் சென்ற நபருமே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்ட போது குறித்த பெண்ணுக்கும் அவரை சந்திக்க பாடசாலைக்கு சென்ற நபருக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் குறித்த நபரை பாடசாலைக்கு வருமாறு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன் பின்பு பாடசாலைக்குச் சென்ற குறித்த நபருக்கும் உயிரிழந்த பெண்ணிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply