யாழ். மஹாஜனாக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவருடன் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (23) தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், பெண்ணின் வாயைப் பொத்தி வீட்டின் பின்பக்கமாக பெண்ணை இழுத்துச் சென்றபோது, இளைஞனின் பிடியில் இருந்து நழுவிய பெண் கூக்குரலிட்டுள்ளார்.
கூக்குரல் கேட்டு அயலவர்கள் பெண்ணின் வீட்டுக்கு வந்தவேளை குறித்த இளைஞன் தப்பித்து ஓடினார்.
முறைப்பாட்டின் பிரகாரம் இளைஞரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
மனைவி, மகளை காயப்படுத்தியவருக்கு பிணை
24-04-2015
மனைவியை வாளால் வெட்டியும், மகளை நிலத்தில் தூக்கி அடித்தும் காயப்படுத்திய 48 வயதுடைய சந்தேகநபரை 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (23) அனுமதியளித்துள்ளார்.
அளவெட்டிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற சம்பவத்தில் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மகள் சிறுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த தெல்லிப்பளை பொலிஸார், சந்தேகநபரை புதன்கிழமை (22) கைது செய்து வியாழக்கிழமை (23) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.