ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    பிரதான செய்திகள்

    இஸ்லாமிய பண்புகள் அற்ற ISIS – லத்தீப் பாரூக் (கட்டுரை)

    AdminBy AdminApril 28, 2015No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று முழு முஸ்லிம் உல­கி­னதும் கண்­ட­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ளது.

    மிக நன்­றாகப் பயிற்­றப்­பட்டு, நன்கு நிதி­வளம் பெற்ற, மிகச்­சி­றந்த ஆய­தங்­களைக் கொண்­டுள்ள இந்த ISIS கோஷ்டி யார்? என்­ப­துதான் பல­ரையும் சிந்­திக்க வைத்­துள்ள கேள்­வி­யாகும்.

    சிரி­யாவின் ஒரு பகுதி நிலப்­ப­ரப்பில் தோன்றி மிக விரை­வாக ஈராக்கின் வட பகுதி வரை ஊடு­றுவி நிலப்­ப­ரப்­புக்­களை ஆக்­கி­ர­மித்த இவர்­களின் தோற்றம் எங்­கி­ருந்து உரு­வா­னது?.

    இந்தப் பிர­தே­சங்­க­ளுக்குள் அவர்கள் எவ்­வாறு கன­ரக ஆயு­தங்­களைக் கொண்டு வந்­தார்கள்? யார் இவர்­க­ளுக்கு இந்­த­ளவு சிறந்த ஆயுதப் பயிற்­சியை வழங்­கி­னார்கள்?

    ஆற்­றல்­மிக்க முழு அள­வி­லான ஓர் இரா­ணுவ அணி­யாக எப்­படி அவர்கள் தங்கள் கன­ரக ஆயு­தங்­க­ளோடு பாலை­வன எல்­லை­களைக் கடந்து வந்­தார்கள்?

    iraq-syria-isis-isil-map-june-12-2014

    பிரிட்­டனை விடப் பெரி­ய­ள­வி­லான ஒரு நிலப்­ப­ரப்பை எப்­படி அவர்கள் இவ்­வ­ளவு விரை­வாகத் தமது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்­தார்கள்?

    இது­வரை கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­களின்படி ISIS ஜோர்­தானில், இஸ­ரேலின் உளவுச் சேவையான மொஸாட்­டினால் பயிற்சி அளிக்­கப்­பட்ட ஓர் அணி­யாகும். அமெ­ரிக்கா இதற்குத் தேவையான ஆயு­தங்­களை வழங்­கி­யுள்­ளது.

    சவூதி அரே­பியா தேவை­யான நிதி உத­வி­களை அளித்­துள்­ளது. இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான ஒட்டுமொத்த சதித் திட்­டமே இது­வாகும்.

    இஸ்­ரேலின் உரு­வாக்கம் மற்றும் ஐரோப்­பிய ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் வருகை என்­ப­ன­வற்­றுக்கு முன் அமை­தி­யா­கவும் நல்­லி­ணக்­கத்­தோடும் பல நூற்­றாண்­டு­க­ளாக வாழ்ந்த ஷீயா மற்றும் ஸுன்னி முஸ்லிம்­க­ளுக்கு இடை­யி­லான மோதல்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான சதித்­திட்­டத்தின் ஓர் அங்கமாகவும் ISIS இன் உரு­வாக்கம் அமைந் ­துள்­ளது.

    140826-isis-militants-jms-2247_270d19c32ed60f50f05211527ae71707கப்பம் கோரல், பணத்­துக்­காக ஆள் கடத்தல், பல்­வேறு வித­மான கொள்­ளைகள், மக்­க­ளி­ட­மி­ருந்து சட்ட­வி­ரோத வரி அற­விடல் என எல்­லா­வி­த­மான சட்­ட­வி­ரோத செயல்­க­ளிலும் ஈடு­படும் ஒரு இயந்திரம் தான் ISIS. இவர்­களின் நிச்­ச­ய­மான புனித நோக்கம் எண்ணெய் கடத்தல் அன்றி வேறு எதுவும் இல்லை.

    மிக அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு மதிப்­பீட்டின் பிர­காரம் ISIS கலீபா (ஆட்­சி­யாளர்) தான் தம் வச­முள்ள ஈராக்கின் வட பகு­தியில் மற்றும் சிரி­யாவின் வட கிழக்கில் காணப்­படும் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் மீது நேர­டி­யான பூரண கட்­டுப்­பாட்டைக் கொண்­டுள்ளார்.

    இங்­கி­ருந்து மிக மலி­வான விலையில் எண்­ணெயை விற்­பனை செய்­வதன் மூலம் நாள் ஒன்­றுக்கு இவர்கள் இரண்டு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை சம்­பா­திக்­கின்­றனர்.

    இந்த வரு­மா­னங்கள் எல்­லாமே பண­மாக அல்­லது பண்­ட­மாற்­றாக பெறப்­ப­டு­கின்­றன. இந்த இஸ்லாமிய இராஜ்­யத்தின் சிக்கல் மிக்க விநி­யோக வலை­ய­மைப்பு முக­வர்­க­ளிடம் இருந்து யார் இந்த எண்­ணெயை கொள்­வ­னவு செய்­கின்­றார்கள் என்­பது பரம இர­க­சி­ய­மா­கவே உள்­ளது.

    ஆனால் இஸ்­லா­மிய கிலாபத் (ஆட்­சிக்கு உட்­பட்ட) பிர­தேசம் என்று சொல்­லப்­ப­டு­கின்ற இந்தப் பிரதேசத்தில் இருந்து பாயும் எண்ணெய் துருக்கி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடு­களைச் சென்றடைகின்­றது என்­பது மட்டும் தெரி­ய­வந்­துள்­ளது.

    இந்த கிலா­பத்தை இலக்கு வைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்­மை­யி­லேயே அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மா­வுக்கு இருக்­கு­மானால் இந்தப் பணம் எங்கு சென்­ற­டை­கின்­றது என்­பதை அவர்­களால் நிச்­சயம் மிக இல­கு­வாகக் கண்டுபிடித்துவிட முடியும் (நிச்­சயம் இது ஒரு வங்­கிக்கு செல்­ல­வில்லை) ஆனால் அதை விட்­டு­விட்டு அவர்கள் தேவை­யில்­லாத இரா­ணுவ நட­வ­டிக்­கை­களில் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

    இன்­றைய நிலை பற்றி பிர­பல பத்தி எழுத்­தாளர் சனி ஹூண்டா குறிப்­பி­டு­கையில், செப்­டம்பர் 11 இற்குப் பின் பல்­வேறு வழி­களில் நோக்­கு­கின்ற போது, முஸ்­லிம்­களின் வர­லாற்றில் இது மிகமோசமான ஒரு நிலை­யாக உள்­ளது.

    இந்த நிலை முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் கூட பாரிய அள­வி­லான அமைதியீ­னத்தை ஏற்­ப­டுத்த வாய்ப்­புண்டு. மத்­திய கிழக்கை இது துண்டு துண்­டாக்கி சீர­ழித்து விடும். மேலும் பல தலை­மு­றைக்கு இது அமை­தி­யீ­னத்தை தொடரச் செய்யும் என்று குறிப்­பி­டு­கின்றார்.

    பிரான்ஸின் வாராந்த சஞ்­சி­கை­யான சார்ளி ஹெப்டோ அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் மற்றும் கொலைகள், ஏனைய பல இடங்­களில் மிகவும் சாது­ரி­ய­மாகத் திட்­ட­மி­டப்­பட்டு மேற்கொள்­ளப்­பட்ட கொலைகள் என்­பன இஸ்­ரேலின் மொஸாத் இயக்­கத்தின் கைங்­க­ரி­ய­மாக இருக்கலாம் என்ற ஒரு சந்­தே­கமும் நில­வு­கின்­றது.

    முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களின் ஞானத் தந்­தை­யாக இருக்கும் இவர்கள், மேற்­கு­ல­கிலும் தங்­க­ளது கைங்­க­ரி­யத்தை பரவச் செய்து முஸ்­லிம்­க­ளுக்கு தலை குனிவை ஏற்­ப­டுத்த தொடங்கிவிட்டார்­களா என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

    2015 பெப்­ர­வரி 24இல் ISIS கோஷ்­டியி­ன ­ருக்கு அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­படை விமா­னங்கள் மூலம் தேவை­யான ஆயு­தங்­களைப் போட்­ட­தாக பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

    இந்த தக­வ­லுக்கு மேலும் வலு­வூட்டும் வகையில், 2015 பெப்­ர­வரி 16 திங்­கட்­கி­ழமை ஈராக்கின் பாராளுமன்ற உறுப்­பினர் ஒருவர் ஈராக்­கிய படை­யினர் அல் அன்பார் மாநி­லத்தில் IS பிர­தே­சத்­துக்கு ஆயு­தங்­க ­ளுடன் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பிரிட்டிஷ் விமா­னங்­களை சுட்டு வீழ்த்­தி­ய­தாகத் தெரிவித்­துள்ளார்.

    al anbar iraq
    ஈராக்கின் அந்த சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அல் அன்பார் மாநி­லத்தில் IS கட்­டுப்­பாட்டுப் பகுதிகளில் அமெ­ரிக்க விமா­னங்கள் தின­சரி அவர்­க­ளுக்குத் தேவை­யான ஆயு­தங்­க­ளையும் ஏனைய பொருட்­க­ளையும் விமா­னங்­களிலிருந்து போட்டு வரு­வ­தாக அங்கு வாழும் மக்கள் அன்­றாடம் ஈராக் அர­சுக்கு முறை­யிட்டு வரு­கின்­றனர் என்றும் தெரி­வித்­துள்ளார்.

    Iraq map locator

    al anbar iraq

    அன்பார் மாநி­லத்தில் எப்­போதும் கொந்­த­ளிப்பும் குழப்­ப­மு­மான ஒரு சூழல் நிலவ வேண்டும் என்று அமெ­ரிக்கா விரும்­பு­வதன் கார­ண­மா­கவே பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளுக்கு அன்­றாடம் ஆயு­தங்­க­ளையும் ஏனைய பொருட்­க­ளையும் மேலைத்­தேய படைகள் விநி­யோ­கித்து வரு­கின்­றன.

    ஏனெனில், அன்பார் மாநிலம் கர்­பலா மற்றும் பக்தாத் நக­ரங்­க­ளுக்கு மிக அருகில் அமைந்­துள்ள மாநில­மாகும். இந்தப் பிர­தே­சத்தில் ISIS பிரச்­சினை முடி­வுக்கு வரக்கூடாது என்­பதே அவர்­களின் விருப்­ப­மாகும் என்று அந்தப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேலும் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

    அமெ­ரிக்க உள­வா­ளி­யாக இருந்து தற்­போது தலை­ம­றை­வாக வாழ்ந்து வரும் எட்வர்ட் சுனோடன், ISIS மொஸாட்­டினால் உரு­வாக்­கப்­பட்டு பயிற்சி அளிக்­கப்­பட்ட ஒரு பிரிவு என்றும், அமெ­ரிக்­காவும் பிரிட்டனும் இதற்குத் தேவை­யான ஆயு­தங்­க­ளையும் சவூதி அரே­பியா நிதி உத­வி­யையும் அளித்து வரு­கின்­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

    இது முற்­றிலும் உண்மை என்­ப­தற்­கான சான்­றுகள் தற்­போது வெளி­வந்த வண்ணம் உள்­ள­தாக அண்மைக் கால அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

    ‘பனிப்போர் காலமும் அதற்கு பின்­னரும்’ என்ற தொனிப் பொருளில் பத்தி எழுத்­தாளர் மைக்கல் சசு­டோவ்ஸ்க்கி எழு­து­கையில் ‘அமெ­ரிக்­காவின் CIA பாகிஸ்­தானின் இரா­ணுவ உளவுப் பிரிவை முஜாஹி­தீன்­களைப் பயிற்­று­விக்க ஒரு முக்­கிய கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­தி­யது.

    இதற்கு பக­ர­மாக CIA அனு­ச­ர­ணை­யுடன் கூடிய ஆயுத பயிற்சி இஸ்­லா­மிய கற்­கை­க­ளோடு இரண்­டறக் கலந்­தது.

    ஆயு­த­பாணி இஸ்­லா­மிய தளங்­களை கிளின்டன் மற்றும் புஷ் நிர்­வா­கங்கள் தொடர்ச்­சி­யாக ஆத­ரித்து வந்­துள்­ளன. இதில் ஒஸாமா பின் லேடனின் அல்­கைதா வும் அடங்கும்.

    இது அமெ­ரிக்க வெளி­யு­ற வுக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் ஒர் அங்­க­மா­கவே இருந்து வந்­துள்­ளது. பொஸ்­னியா மற்றும் கொஸோவோவா விட­யங்­களில் கிளின்டன் நிர்­வா­கத்­துக்கும் ஒஸாமா பின் லேட­னுக்கும் உள்ள தொடர்­பு­களை நிரூ­ பிக்கப் போதி­ய­ளவு தேவை­யான ஆவ­ணங்கள் அமெ­ரிக்க காங்­கி­ரஸில் தாரா­ள ­மாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன’ என்று குறிப்­பிட் ­டுள்ளார்.

    james foley execution

    ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் சொட்லொப் ஆகியோர் கழுத்து வெட்­டப்­பட்டு கொல்­லப்­பட்­டமை தொடர்­பாக கேள்­வி­களை எழுப்­பிய ஊட­கங்கள் வரி­சையில் தோஹாவைதளமாகக் கொண்டு செயற்­படும் அல்­ஜ­ஸீ­ராவின் அரபுப் பிரிவும் இணைந்து கொண்­டது.

    இவர்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்­பான காட்­சிகள் நம்ப முடி­யா­த­வை­யாக உள்­ளன என்றும், இவர்கள் இரு­வரும் ஹொலிவூட் திரைப்­பட நடி­கர்­களின் பங்­கினை இந்தக் காட்­சி­களில் நிறை­வேற்றி உள்­ள­னரா என்றும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

    சிரி­யாவில் அமெ­ரிக்கா ஊடு­றுவ முன்­ப­தாக ஒரு முன்­னோட்ட நிகழ்­வா­கவே இந்தக் காட்­சிகள் ஒளிப்ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளன என்று தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

    இந்தக் கொலைகள் தொடர்­பான முத­லா­வது வீடியோ காட்­சியைப் பார்க்­கின்ற ஒரு­வரை முதலில் ஈர்க்கும் விடயம். ஜேம்ஸ் போலே பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ராக அன்றி ஒரு வீரனைப் போல் குரல் எழுப்புவ­தாகும்.

    முழுக்க முழுக்க அரங்கம் அமைத்து நிறை­வேற்­றப்­பட்ட இந்தக் காட்­சியில் அவர் ஒரு நீண்ட கூற்றை வாசிக்­கின்றார்.

    அதை வாசிக்கும் அந்தக் காட்­சி­களில் அவரின் கண் அசை­வு­களிலிருந்து அவர் முன்­னேற்­பாட்டு காட்சிப் பிர­தி­யொன்றை வாசிக்­கின்றார் என்­பதும் புரி­கின்­றது என்று அல்­ஜ­ஸீரா அரபு செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

    2014 செப்டெம்­பரில் நியூ­யோர்க்கில் செப்டெம்பர் 11 தாக்­கு­தலின் மூன்­றாண்டு நிறைவை அமெ­ரிக்­காவும் உலகும் நினைவு கூர்ந்­தபின் ISIS என்­பது புதிய அல்­கைதா என்ற நவீன உலக வர­லாற்றின் உலக மகா பொய்­யையும் அமெ­ரிக்கா அரங்­கேற்றி வைத்­தது.

    முன்னொருபோதும் இல்­லாத அள­வுக்கு உலக அரங்கில் ஆக்­கி­ர­மிப்­பையும் உள்ளூர் அரங்கில் பொலிஸ் மட்ட செயற்­பட்­டையும் அதி­க­ரிக்கும் வகையில் அமெ­ரிக்க மக்­களை நம்ப வைப்­ப­தற்­காக இந்த உலக மகா பொய் அமெ­ரிக்க மக்கள் முன்­னி­லையில் அரங்­கேற்­றப்­பட்­டது.

    ‘ISIS, எண்ணெய் அர­சியல் மற்றும்   இஸ்­லா­மோ­போ­பி­யாவின் (இஸ்லாம் பற்­றிய மித­மிஞ்­சிய அச்சம்) உச்ச கட்டம்’ எனும் தலைப்பில் பிர­பல இந்­திய பத்தி எழுத்­தாளர் ராம் புன்­யானி குறிப்­பி­டு­கையில் ‘மேற்கு ஆசியப் பிராந்­தி­யத்தில் எண்ணெய் செல்­வத்தைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க அமெ­ரிக்கா தீட்­டி­யுள்ள திட்­டங்கள் ஏராளம் உள்­ளன.

    அமெ­ரிக்கா இதற்­கென தனக்கே மட்டும் உரித்­தான புறம்­பான நியா­யங்­களைக் கொண்­டுள்­ளது. எண்ணெய் மிகவும் விலை­ம­திப்­பற்ற ஒரு பொருள்.

    அதை மற்­ற­வர்கள் கட்­டுப்­பாட்டில் விட்­டு­விட முடி­யாது என்­பது அதில் ஒரு நியா­ய­மாகும். முஸ்லிம் இளை­ஞர்­களை உணர்­வூட்டி அல்­கை­தாவை நாங்கள்தான் உரு­வாக்­கினோம் என்று ஹிலரி கிளின்டன் அண்­மையில் மிகத் தெளி­வாக ஒரு பேட்­டியில் தெரி­வித்­துள்ளார்.

    இஸ்­லாத்தில் இருந்து திரி­பு­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்­களை மைய­மாகக் கொண்டுதான் இந்த இளைஞாகள் உணர்­வூட்­டப்­பட்­டார்கள் என்­பதை இந்தப் பிராந்­தி­யத்தின் வர­லாறு விளக்­கு­கின்­றது. அதில் வஹ்­ஹா­பிஸம் பிர­தா­ன­மா­ன­தாகும்’ என்று குறிப்­பி­டு­கின்றார்.

    ஆப்­கா­னிஸ்­தானில் ரஷ்ய படை­களை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­காக மிகவும் பிர­மாண்­ட­மான முறையில் பாரிய நிதி உதவி­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்­டது தான் அல் கைதா.

    அல்­கை­தாவின் காட்­டு­மி­ராண்­டித்­தனம் வெளிப்­படத் தொடங்­கி­யதும் அமெ­ரிக்கா செப்­டம்பர் 11 தாக்­கு­தலின் பின் ‘இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தம்’­என்ற முத்­தி­ரையை குத்தத் தொடங்­கி­யது.

    இந்த செப்­டம்பர் 11 தாக்­குதல் சம்­ப­வத்­துக்கு முன் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் சம­யத்­தோடு தொடர்புபடுத்­தப்­ப­ட­வில்லை. வெவ்­வேறு சம­யங்­களைச் சேர்ந்­த­வர்கள் இவ்­வா­றான காரி­யங்­களில் ஈடு­பட்­ட­போ­திலும் கூட ஒரு போதும் அவற்­றுக்கு சமய முத்­திரை குத்­தப்­ப­ட­வில்லை.

    மகாத்மா காந்தி கொலை, இந்­திரா காந்தி கொலை, ராஜீவ் காந்தி கொலை, தாய்­லாந்தில் மியன்­மாரில் மற்றும் இலங்­கையில் பௌத்த பிக்­கு­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள், நோர்­வேயில் என்டர்ஸ் பெர்லிங் பிரிவிக்ஸ் செய்த கொலைகள், பல்­வேறு அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பல்­வேறு சமூ­கத்­த­வர்கள் மேற்­கொண்ட அர­சியல் கொலைகள் என எதற்­குமே சமய முத்­திரை குத்­தப்­ப­ட­வில்லை.

    ஆனால் செப்­ட­மபர் 11 தாக்­கு­தலின் பின்னர் பயங்­க­ர­வாதம் என்­பது இஸ்­லாத்­தோடு மட்டும் பின்னிப் பிணைக்­கப்­பட்­டது.

    wahab najdiஅல்­கை­தாவை உரு­வாக்­கு­வ­தற்கும் முஜா­ஹி­தீன்­க­ளாக சேர்ந்த இளை­ஞர்­களை உணர்வூட்டுவதற்கும் அமெ­ரிக்கா தெரிவு செய்த இஸ்­லா­மிய பிரிவு அப்துல் வஹாப் என்­ப­வரால் உரு­வாக்­கப்­பட்டது.

    இஸ்­லா த்தை மிகவும் இறுக்­க­மாக்கி தனது பிரத்­தி­யே­க­மான பார்­வையில் அதனை வெளிப்­ப­டுத்­தினார்.

    இது சவூ­தியின் ஆளும் குடும்­பத்­து க்கு மிகவும் பொருத்­த­மாக அமைந்­தது. எண் ணெய் வளங்கள் மீது தமது கட்­டுப்­பாட்டை வைத்­தி­ருக்க இது அவர்­க­ளுக்குப் பொருந்­தி­யது.

    அமெ­ரிக்க வடி­வ­மைப்­புக்கும் இதே முறை பொருத்­த­மாக காணப்­பட்­டது. இங்கே அவர்கள் காபிர் (உண்மையை ஏற்க மறுப்­பவர்) என்­பதை முஸ்லிம் அல்­லாத ‘ஏனை­ய­வர்கள்’ என அடையாளப்படுத்தினர்.

    இப்­போது வஹ்­ஹாபி இஸ்­லாத்தை தலையில் வைத்துக் கொண்டும் அமெ­ரிக்க ஆத­ர­வுடன் கிடைத்தி­ருக்கும் ஆயு­தங்­களை கரங்­களில் ஏந்திக் கொண்டும் அவர்கள் என்ன செய்ய விளை­கின்­றார்கள்?

    இதன் வழித்தோன்­ற­லாக காலப்போக்கில் உரு­வா­னது தான் ISIS. கலீபா ஒரு­வரை உரு­வாக்கி உலகை ஆட்சி செய்­யலாம் என்ற அவர்­களின் மாயை, அதன் விளை­வாக ஏற்­பட்­டுள்ள பித்துப் பிடித்த நிலை என்­பன தற்­போது கண்­கூ­டாகத் தெரியத் தொடங்­கி­யுள்­ளன.

    இவ்­வா­றுதான் அமெ­ரிக்க தற்­போது முன்­னைய கால­னித்­துவ ஆதிக்­க­வா­தி­களைப் பின்­பற்றி பிரித்தாளும் தனது விளை­யாட்டை அரங்­கேற்றி வரு­கின்­றது.

    இந்­தி­யாவில் கால­னித்­து­வ­வா­திகள் இன­வாத அர­சி­யலின் விதையை தூவினர். சோவியத் ரஷ்­யாவின் வீழ்ச்­சிக்குப்பின் கடந்த சில தசாப்­தங்­களில் மேற்­கா­சி­யாவில் இந்த விதை தூவப்­பட்­டுள்­ளது.

    இன­ரீ­தி­யான பிரி­வி­னை­களின் அடிப்­ப­டையில் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் நாடு­களைத் துண்­டாடும் பணி­யினை மேற்­கொண்­டுள்­ளத.

    ஷிஆ, ஸுன்னி, குர்திஸ் என இன ரீதி­யாக தூப­மிட்டு நாடு­களை துண்­டாடி பல­மி­ழக்கச் செய்யும் முயற்­சியில் அமெ­ரிக்கா ஈடு­பட்­டுள்­ளது. இந்த முயற்சி தற்­போது உச்ச கட்­டத்தை அடைந்­துள்­ளது.

    இதே­நேரம் இஸ்­லாத்தை பூதா­க­ர­மாகச் சித்­தி­ரித்து ,இஸ்லாம் பற்றி மித­மிஞ்­சிய அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் கைங்­க­ரி­யமும் சம­கா­லத்தில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு உலகம் முழு­வதும் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றது.

    news_21-01-2015_21SAHEBஅல்­கைதா மற்றும் ISIS ஆகிய அமைப்­பக்­களின் தீய செயற்­பா­டுகள் இதற்கு சிறந்த முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

    சக்­தி­மிக்க நாடுகள் தமது சொந்த நலன்களுக்காகவும், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும், சமயத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றபோது சமூக சிந்தனைகளில் நாம் எவ்வாறு நியா யத்தை நிலை நிறுத்த முடியும்.

    ஒரு சம யம் சார்ந்த சமூகத்தை பூதாகரமாகச் சித்திரிக்கும் விடயம் என்பது எளிதில் தீர்வு காணக்கூடிய ஒரு விடயமும் அல்ல.

    ஆதிக்க சக்திமிக்க பிரிவுகள் மத்தியில் நிலவும் கருத்துக்களுக்கு சவால் விடுப்பதும், அவர் களின் சமூக ஆதிக்க சக்திகளுக்கு சவால் விடுப்பதும் மிகவும் கஷ்டமான காரியங் களாகும்.

    எமது சமூகத்தில் அமைதியும், முன்னேற்றமும் நிலவ வேண்டுமானால் இந்த விடயங்களில் நாம் பாரதூரமாகக் கவனம் செலுத்த வேண்டியதும் அவசிய மாகும்.

    ‘மனித குலத்தின் மீது யுத்த அச்சுறுத்தல் விடுக்கும் ஒபாமா’ என்ற கட்டுரையில் கௌரவத்துக்குரிய அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் லென்ட்மன், “நிரந்தர யுத்தம் என்பது அமரிக்காவின் உத்தியோகபூர்வ கொள்கை.

    யுத்த மோகம் கொண்ட நீண்ட அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் இப் போது உள்ளவர்தான் ஒபாமா. அவர் நேரடி யாகவும் மறைமுகமாகவும் பல யுத்தங்க ளைத் தொடுத்துள்ளார்.

    தனது பதவிக்காலத்தில் அவர் இதனை நிறையவே செய்துள்ளார். இன்னும் பல மரணங்களும், அழிவுகளும் அவரின் சிந்தனையில் உள்ளன. அமெரிக்காவின் கலாசாரமே வன்முறைதான். அது எப்போ தும் அப்படியேதான் இருந்து வந்துள்ளது.

    சமாதானத்தின் பெயரால் அது யுத்தங்களைப் புகழுகின்றது. மேலைத்தேய நாடு கள் மத்தியில் அதிகமான மனித கொலை களைப் புரிந்துள்ள நாடும் அதுவே” என்று கூறுகின்றார்.

    Post Views: 8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி

    March 20, 2023

    அதிர்ச்சி தகவல் என்ன நடக்கும்?

    March 7, 2023

    காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? – இளைஞரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

    February 28, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2015
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version