முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

முல்லைத்தீவின் உடையார்கட்டு சந்திக்கு அண்மையாக கட்டிடமொன்று யாழ் ஒப்பந்தக்காரர் ஒருவரால் கட்டப்பட்டு வருகிறது.

அந்த ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தை சேர்ந்த 32 வயது ஆசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல்ப்பொழுதில் கட்டிடகாவல்ப்பணியில் இருந்துள்ளார்.

அந்தச்சமயத்தில் அயல்வீட்டில் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்ததை மோப்பம்பிடித்துச் சென்று, மறைந்து நின்று அவர் குளிப்பதை தனது கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்துள்ளார்.

அந்த சமயத்தில் ஆசாமியின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது மனைவி அழைப்பேற்படுத்தியிருக்கிறார்.

அருகிலுள்ள பற்றைக்குள் கையடக்கத்தொலைபேசி சத்தம் வந்ததை கேட்ட யுவதி, அங்கு சென்றபோது, குறித்த நபர் அவரை “சூட்” பண்ணிக் கொண்டிருந்த விடயம் அம்பலமானது.

யுவதி போட்ட கூச்சலில் குறித்த நபர் தப்பியோட முனைந்துள்ளார்.

வேலி கம்பியில் குறித்த நபர் ஆடை சிக்கியதால் அவரால் வேகமாக தப்பிச் செல்ல முடியவில்லை. அதற்குள் அயலவர்கள் ஒன்றுசேர்ந்து மணிரத்தினத்தை பிடித்து கும்மியெடுத்து விட்டனர்.

விடயத்தை கட்டிட ஒப்பந்தக்காரரிற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் திருமணம் செய்தது, குறித்த நபர் மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தமை ஆகிய இரண்டு காரணங்களையும் கருத்தில் கொண்ட ஒப்பந்தக்காார், அதனை  ஊர்மக்களிடம் புரியவைத்து அவரை சட்டத்தின் முன்நிறுத்தாமல், எச்சரித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

Share.
Leave A Reply