சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் ஒருவர் 689 அடி கோபுரத்தில் ஏறியுள்ளார்.

நேபாளத்தை கடந்த சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில்  ஆயிரக்கனக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். மேலும் லட்சகணக்கானோர் உடமைகளை இழந்து திறந்த வெளிகளில் பசியுடன் தவித்து வருகிறார்கள்.

அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதம்மாகவும், தனது ஆதரவையும் தெரிவிக்கும் விதம்மாகவும் பிரான்ஸ் நாட்டு மக்களால் “ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படும் அலன் ராபர்ட், பாரிஸில் உள்ள 689 அடி கோபுரத்தில் எந்த உபகரணங்களும் பயன்படுத்தாமல் நேபாள கொடியுடன் ஏறினார்.

அங்கு கூடியிருந்த மக்களும் கை தட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

Share.
Leave A Reply