உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.
67.5 அடி உயரமான இந்தப் புத்தர் சிலையே, கற்பாறையில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையாகும்.
அமர்ந்த நிலையில் உள்ள இந்தப் புத்தர் சிலையை, பெரியதொரு பாறையில் செதுக்கும் பணிகள் 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சிலையை, சிற்பாச்சாரியார் முத்தையா தலைமையிலான இந்திய சிற்பிகள் குழுவொன்றே செதுக்கி உருவாக்கியுள்ளது.
இந்தப் புத்தர் சிலையை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, விகாரையின் பிரதம பிக்குவான, வண.எகொடமுல்லே அமரமொழி தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்திகள் (30-04-2015)வீடியோவில்…