கொழும்பு கிருளப்பனையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இனைந்து நடத்திய மே தினக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் தெரியாது சென்றிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவர் கூட்ட மேடையில் ஏறாது காரில் இருந்தவாறு சில நிமிடங்கள் கூட்டத்தை பார்வையிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கமான தரப்பினரிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டுமே கோரிக்கை விடுத்து வரும் தரப்பினரே குறித்த மே தின கூட்டத்தை நடத்தியதுடன் அந்த கூட்டத்துக்கு தனது வாழ்த்து செய்தியையும் நேற்று அவர் அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோதாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜை அந்தஸ்தை நீக்கிக்கொள்ள தீர்மானம்
02-05-2015
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜை அந்தஸ்தை நீக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்களுக்கமைய இரட்டைப் பிரஜாஉரிமையை கொண்டுள்ளவர்களுக்கு இனிவரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலையிலேயே அவர் தனது அமெரிக்க பிரஜா உரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சிங்கள வார பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக கடந்த காலங்களாக செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.