யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று 02.05.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இன்று காலை இடம்பெற்ற இரதோற்சவப் பெருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 24-04-2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பத்து நாட்கள் இடம்பெறும் இத்திருவிழாவில் பத்தாம் நாளாகிய நாளை (03-05-2015) தீர்த்தோற்சவமும் இடம்பெற உள்ளது.