லண்டன் படிங்டனில் உள்ள சென். மேரி மருத்துவமனையின் படிகளில் வந்து இளவரசர் வில்லியம் மற்றும் மனைவி கேட் மிடெல்டன் ஆகியோர் நேற்று பிற்பகல் அன்று காலை தமக்கு பிறந்த தமது இரண்டாவது குழந்தையான பெண் குழந்தையை அங்கு கூயியிருந்த பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு காண்பித்தனர்.
அதன் பின்னர் கென்சிங்டனில் உள்ள தமது வீட்டுக்கு அவர்கள் சென்றனர். இதேவேளை, இன்று காலை அரச குடும்பத்தினர் இன்னமும் பெயர் சூட்டப்படாத அவர்களின் குழந்தையை பார்பதற்காக சென்றனர்.
சென் மேரி மருத்துவமனையில் வில்லியம்ஸ் மற்றும் கேட் ஆகியோர் தமது குழந்தையை முதன்முதலில் பொதுமக்களுக்கு காண்பிக்கும் படங்களையும் அரச குடும்பத்தினர் குழந்தையை பார்ப்பதற்காக செல்வதையும் படங்களில் காணலாம்.