யாழ். திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பர திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இவ்விழாவின் போது சிவகாம சுந்தரி அம்மன் இலங்கையில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணய தாள்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
இந்த அலங்காரத்திற்காக இலங்கையின் 10 ரூபாய் நாணய தாள்கள் முதல் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் வரையிலானவைகள் பயன்படுத் தப்பட்டிருந்தன.
இந்நாணயத்தாள்களின் மொத்தப் பெறுமதி 25,000 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.