இந்த நூற்­றாண்டின் ஈடு இணை­யற்ற குத்­துச்­சண்டை போட்­டி­யாக கரு­தப்­பட்ட உலக அதி­பார சம்­பி­யன்­க­ளான அமெ­ரிக்­காவின் மேவெதர்- பிலிப்­பைன்ஸின் மேனி பேக்­கியோ மோதலில் மேவெதர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மேவெ­த­ருக்கு ஆயி­ரத்து 115 கோடி ரூபா பரிசுத் தொகை­யாக வழங்­கப்­பட்­டது.

உல­கப்­புகழ் பெற்ற குத்­துச்­சண்டை வீரர்­க­ளான ஃப்ளாயிட் மேவெதர் மற்றும் மேனி பேக்­கியோ ஆகி­யோ­ருக்­கி­டை­யே­யான ‘வெல்டர் வெயிட்’ குத்­துச்­சண்டை போட்டி அமெ­ரிக்­காவின் லாஸ்­வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம். கிராண்டில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது.

இந்த போட்­டிக்­காக லாஸ் வேகாஸ் நக­ரத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான குத்­துச்­சண்டை பிரி­யர்கள் குவிந்­தனர். ஏரா­ள­மான தொழி­ல­தி­பர்கள் தங்­க­ளது தனி குட்டி விமா­னங்­களில் லாஸ் வேகாஸ் நகரில் குவிந்­தனர்.

648x415_americain-floyd-mayweather-contre-philippin-manny-pacquiao-2-mai-2015-las-vegasஇலங்கை நேரப்­படி காலை 8.30 மணி­ய­ளவில் தொடங்­கிய இந்த குத்­துச்­சண்டை போட்டி 12 சுற்­று­க­ளாக நடத்­தப்­பட்­டது. சுமார் 30 கோடி மக்கள் உலகம் முழுக்க இந்த போட்­டியை தொலைக்­காட்­சி­களில் பார்த்­துள்­ளனர்.
இந்த போட்டி தொடங்­கிய முதல் சுற்­றுக்­களில் பேக்­கியோ அபா­ர­மாக சண்­டையில் ஈடு­பட்டார். சில குத்­துக்கள் மேவெ­தரை நிலை குலை­யவும் வைத்­தன.

ஆனால் முதலில் விட்­டுப்­பி­டித்த, மேவெதர் இறுதி சுற்­றுக்­களில் பேக்­கி­யோவின் குத்­துக்­களை அபா­ர­மாக எதிர்­கொண்டு பதில் தாக்­கு­தலை தொடுக்கத் தொடங்­கினார், இந்த போட்­டிக்கு 3 நடு­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

முடிவில் அவர்கள் அனை­வ­ருமே மேவெ­த­ருக்கு ஆத­ர­வா­கவே முடி­வு­களை அறி­வித்­தி­ருந்­தனர். 118, 110 என்று ஒரு நடு­வரும் 116-,112 என்று மற்ற நடு­வர்­களும் புள்­ளிகள் வழங்­கி­யதால் மேவெதர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

வெற்றி பெற்ற மேவெ­த­ருக்கு ரூ.7 கோடி மதிப்­புள்ள சம்­பியன் பெல்ட் அணி­விக்­கப்­பட்ட போது, அரங்­கமே அதிர்ந்­தது.
வெற்றி குறித்து மேவெதர் கூறு­கையில், ”இந்த வெற்­றிக்­காக முதலில் கட­வு­ளுக்கும் உலகம் முழுக்­க­வுள்ள குத்­துச்­சண்டை பிரி­யர்­க­ளுக்கும் நன்றி தெரி­வித்துக் கொள்­கிறேன்.

நானும் மேனி பேக்­கி­யோவும் ஆசிர்­வ­திக்­கப்­பட்­ட­வர்கள். பேக்­கியோ கடு­மை­யாக போட்­டி­யா­ள­ராக திகழ்ந்தார் ”என்றார்.

தோல்வி குறித்து பேக்­கியோ கூறு­கையில், ”மிகத்­தி­ற­மை­யாக நான் சண்­டை­யிட்டேன். சில குத்­துக்கள் மிக நேர்த்­தி­யாக அவர் மீது இறங்­கின. மேவெ­தரால் அவற்றை தவிர்க்க முடி­ய­வில்லை.

இந்த போட்­டியில் நான் வெற்றி பெற்­ற­தா­கவே கரு­து­கிறேன். சில குத்­துச்­சண்டை வீரர்­க­ளிடம் உள்ள அடிப்­படை பலம் கூட மேவெ­த­ரிடம் இல்லை என்றே கரு­து­கிறேன்” என தெரி­வித்தார்.

இறுதி சுற்­றுக்­களில் மேவெ­தரின் கையே பெரும்­பாலும் ஓங்­கி­யி­ருந்­தது. இறு­தியில் எதிர்­பார்த்­தது போல் மேவெதேரே வெற்றி பெற்றார். இது­வரை 48 குத்­துச்­சண்டை போட்­டி­களில் கள­மி­றங்­கி­யுள்ள மேவெதர் ஒரு போட்­டியில் கூட இது­வரை தோல்வி காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சண்டையின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் மேவெதருக்கு 60 சதவீதம் அதாவது ஆயிரத்து 115 கோடி ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. பேக்கியோவுக்கு ரூ.777 கோடி ரூபா கிடைத்தது.

Share.
Leave A Reply