“ராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்’ எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு பல ரசிகர்கள் அடிமை. அந்த வெறித்தனமான ரசிகர்கள் பட்டியலில் காக்கட்டூ என்ற பறவையும் புதிதாக சேர்ந்துள்ளது.

அவரது இசைக்கு அந்த பறவை குத்தாட்டம் போடும்  வீடியோ யூடியூபில் மரண ஹிட்டாகியுள்ளது.

வீடியோவில், 2 காக்கட்டூகளின் (ஒரு வகை கிளி) உரிமையாளர் ஒருவர் கிடார் இசைத்தபடி எல்விஸ் பிரெஸ்லியின் பாடலை பாடுகிறார். அதில் ஒரு காக்கட்டூ எந்த உணர்வுமின்றி இருக்க, மற்றொரு காக்கட்டூ முதலில் இசைக்கெற்றபடி தனது தலையை அழகாக அசைக்கிறது.

சற்று நேரத்தில் தனது தோகையை சிலுப்பியபடி உற்சாக நடனமாடும் காட்சியை நீங்களே பாருங்கள்.

 

புல்லாங்குழல் இசைக்கு கைகளால் இசையமைக்கும் சிறுமி -வீடியோ

Share.
Leave A Reply