2002ஆம் ஆண்டில் மும்பையில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் மீது கார் ஏறியது. மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைச் செய்ததாக சல்மான் கான் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இந்த விபத்து நடந்தபோது, தன்னுடைய ஓட்டுனர்தான் காரை ஓட்டிவந்ததாக சல்மான் கான் கூறினார். ஆனால், சல்மான்கான் தான் காரை ஒட்டியதாகவும் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சல்மான்கான் மேல் முறையீடு செய்யக்கூடும். இதனால், இந்த வழக்கு இன்னும் பல ஆண்டுகள் நடக்கக்கூடும்.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பின்னிரவில் சல்மான்கானின் டோயோட்டா லாண்ட் க்ரூஸர் வாகனம், மும்பையின் பந்த்ரா பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரியின் மீது மோதியது.

இதில், சாலையோரமாகப் படுத்திருந்த ஐந்து பேர் மீது வாகனம் ஏறியது. 38 வயதான நூருல்லா கான் என்பவர் மரணமடைந்தார். மூன்று பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இன்னொருவர் சிறு காயங்களுடன் தப்பினார்.

குடிபோதையில் இருந்த சல்மான் கான் தான் காரை ஓட்டிவந்ததாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சல்மான் மறுத்தார். ஆனால், சாட்சிகள் சல்மான் கானுக்கு எதிராக சாட்சியமளித்தனர்.

சல்மான் கானுக்குப் பாதுகாப்பாக இருந்த காவலர் ஒருவர், குடிபோதையில் சல்மான் கான் வாகனம் மீதான கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவித்தார். இவர் 2007ல் இறந்துபோனார்.

காரின் டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்ததில், தான் விபத்தை ஏற்படுத்திவிட்டதாக ஏப்ரல் மாதத்தில், வழக்கின் விசாரணையின்போது, சல்மானின் ஓட்டுனர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை

 

 

5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்நிலையில் பிற்பகல் 1 மணி அளவில் தண்டனை தீர்ப்பை அளித்த நீதிபதி, சல்மான் கான் மீதான 8 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு  5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

சிறையிலடைக்கப்படுகிறார்

இந்த தீர்ப்பை தொடர்ந்து சல்மான் கானை மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாமீன் கோர முடிவு

இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத சல்மான் கான்!

salman khan 1
மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி ஒருவர் பலியான வழக்கில் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்திலேயே நடிகர் சல்மான் கான் கதறி அழுதார்.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நூருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவமனை பரிசோதனைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சுமார் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த மும்பை அமர்வு நீதிமன்றம், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்தது.

மது அருந்திவிட்டு சல்மான் கான் காரை ஓட்டியதும், லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டியது உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சல்மான் கான் கதறி அழுதார். பின்னர் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட சல்மான் கானை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

Share.
Leave A Reply