ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

உனவட்டுன – ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (06) அதிகாலை 5.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அறுவர் காயமடைந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி நித்திரை கொண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

615379141bus

Share.
Leave A Reply