யாழ் மாவட்டம் அச்சுவேலியை சேர்ந்த சிவனேசன் தனோபிகா என்ற யுவதியும் ஒரு இளைஞரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர் இவ் விசயம் பெண் வீட்டுக்கு தெரிய வர அவர்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
இதனால் வீட்டில் காதலை பிரித்து வைத்தனர். அதோடு அவள் கடும் நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டாள், இதனால் மனமுடைந்த அவள் தூக்குமாட்டி தற்கொலை செய்தாள்.
இறுதி ஊர்வலம் நடைபெற்று இறுதிக்கிரிகைக்காக தீ வைக்கும் போது அவளது தந்தை
“ஐயோ என்னை விட்டு போட்டியேம்மா!!! இப்படி செய்வாய் என்டு தெரிஞ்சிருந்தா உன்னை அவனுக்கே கட்டிவச்சிருப்பன்” என்று தலையில அடித்து அழுது விழுந்தார். இப்படி சொன்னா போன உயிர் வருமா???
உயிருடன் இருந்தபோது செய்திருக்கலாமே!! அழுது மீண்டும் மகள் வருவாளா???
அவளின் உடல் எரியும் போது அழுகைதான் வந்தது. பெண்களால் அதிகம் ஏமாற்றப்படும் இவ் உலகில் இப்படியும் ஒருத்தி இருந்தாள் என்று…… தயவு செய்து காதலை பிரிக்காதீர்கள்… என முக நூலில் பதிவேற்றப் பட்டுள்ள செய்தி.