யாழ்ப்பாணத்தில் அண்மையில் “மாத்தையா குழுவின அட்டகாசம்” என தலையங்கமிட்டு  ஊடகங்களில்  ஒரு செய்தி வந்தததை பார்த்திருப்பீர்கள்.

ஆனால்..  “மாத்தையா குழு” என்ற பெயரில் எந்தக் குழுவுமில்லையாம், ஊடகங்களும் சமூகமுமே இவ்வாறு கூறுகின்றன   என்று வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை (05) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது, ‘யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் குழுக்களுக்கு பெயர் வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்’ என்ற விடயத்தை வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் கூறினார்.

‘வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவொன்றை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்படும் போது, ‘நான் வாள் வைத்திருக்கவில்லை மாத்தையா, நான் இல்லை மாத்தையா’ என்று கூறியுள்ளனர்.

இதனை பொலிஸார் ஊடகங்களுக்கு  ‘மாத்தையா குழு‘ என்று கூறியுள்ளனர் என்று பிரகாஸ் கூறினார்.

இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், ‘வாள்வெட்டுடன் பிடிக்கப்பட்ட குழுவுக்கு மாத்தையா குழுவென்று பெயர் இல்லை. ஊடகங்களும் சமூகமுமே இவ்வாறு கூறுகின்றன’ என்றார்.

‘வாள்வெட்டுக் குழுக்களுக்கு பெயர் சூட்டவேண்டாம்’
06-05-2015
article_1430834025-unnamed

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமே பிரகாஸ் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமான இடம்பெறுகின்றன. ஒருவர் ஒரே குற்றத்துக்காக பலதடவைகள் கைது செய்யப்படுகின்றார்.

இதற்கு வழங்கப்படும் தண்டனைகள் உறுதி செய்யப்படவேண்டும். நீதிமன்றில் இவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிபதி பொலிஸாரிடம் கேட்டே பிணை வழங்குகின்றார். பொலிஸார் சரியான அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

police_roudiவாள்வெட்டு, கஞ்சா போதைப்பொருள் போன்ற சமூக கலாசாரங்கள் கடந்த காலங்களில் எமது சமூகத்தில் காணப்படவில்லை. தற்போது உருவெடுத்துள்ளது.

பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க,

கைது செய்யப்படும் குழுக்களுக்கு பொலிஸார் பெயர் சூட்டவில்லை. அவர்களது சமூகம் தான் பெயர் சூட்டுகின்றது. அதை ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்துகின்றன.

குற்றவாளிகள் நீதிபதியை அணுகுவதற்கு இலங்கை சட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து இடமுள்ளது. மற்றப்படி காட்டுச் சட்டங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுக்க முடியாது என்றார்.

Share.
Leave A Reply