இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் கால இந்தியாவில் முஸ்லிம்களால் இந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு கற்பழிக்கப்படுவதிலிருந்தும், பாலியல் அடிமைகளாக மாற்றப்படுவதிலிருந்தும் தப்புவதற்காக  இந்து பெற்றோர்கள்  தங்களின் பெண் குழந்தைகளுக்கு மிக இளவயதிலேயே திருமணம் செய்யும் (child marriage) வழக்கத்தைத் துவங்கினார்கள்.

தொடர்ந்து நடந்த இஸ்லாமிய ஆட்சிகள் இந்தத் சூழ்நிலையை மேலும் மோசமாக்கின. கொடூரமான முறையில் அடக்கி ஆளப்பட்ட இந்துக்கள் வேறு வழியின்றித் தங்களின் பாரம்பரிய பழக்க, வழக்கங்களைக் கை விட்டார்கள்.

பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு முன்பாகவே இளம் இந்து சிறுவர்களுக்கு மண முடித்து வைக்கப்பட்டார்கள் அவ்வாறு செய்தால் ஒருவேளை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு கிட்டலாம் என்னும் நப்பாசையுடன்.

child_marriage_in_india_bookஇந்த எண்ணம் பரவலாகி இந்தியாவில் அறியாத வயதுடைய சிறுவர். சிறுமிகளிடையே நடக்கும் விவாகங்கள் பெருமளவு நடக்க ஆரம்பித்தன.

இதன் பின்னனியில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும், இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்லும் முஸ்லிம் மனோபாவமும் இருந்தன என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் வாழும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களல்லாத பிற மதத்தினர் மத்தியில் இன்றைக்கும் இது நடந்து கொண்டிருப்பதனைக் காணலாம்.

குறிப்பாக பாகிஸ்தானில் இன்றைக்கும் இந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்படுவது எந்தவிதமான தடையுமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

பங்களாதேஷி மற்றும் பாகிஸ்தானி முஸ்லிம் குண்டர்கள் அழகான இந்து இளம் பெண்களைத் தூக்கிச் செல்வதனைத் தடுக்கும் விதமாக, அப்பகுதியில் வாழும்   இந்துக்கள் எப்பாடு பட்டேனும் அவர்களுக்குத் திருமணம் நடத்தி அவர்களை   இந்தியாவிற்கு  அனுப்பி வைக்க பகீரதப் பிரயத்தனங்கள் அனுதினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இயங்கும் மைனாரிட்டி இயக்கமொன்று அளிக்கும் ஒரு தகவலின்படி, 2005-ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 50 இந்து மற்றும் 20 கிறிஸ்தவப் பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்பட்டு  கட்டாயத் திருமணம்  செய்து வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாலஸ்தீனம் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் தினமும் நடப்பதினை இணையத்தில் நீங்கள் படித்திருக்கலாம்.

6caeb950-0477-4d29-a543-56097d7aa05achildmarriage

*********

அமைதியிலும் சீரிய நோக்கும், நேர்மையும் கொண்ட ஒரு பெரும் மனிதக் கூட்டத்தை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காடுகளுக்குள் விரட்டியது.

உயிர் பிழைப்பதற்கு வேறு வழியில்லாமல் அவர்கள் இரவு நேர கொள்ளைக்காரர்களாகவும், வழிப்பறிகள் செய்து வாழ்பவர்களாகவும் அவர்களை மாற்றியது இஸ்லாமிய ஆக்கிரமிப்பு.

இந்திய சமூக, கலாச்சார, ஆன்மிக வாழ்க்கையில் இஸ்லாமின் பங்களிப்பு என்று எதுவுமில்லை என்று முன்பே பார்த்தோம்.

இன்றைக்கு உலகம் உபயோகிக்கும் கணித அடிப்படை சூத்திரங்களைக் கண்டறிந்தவர்களான பாஸ்கராச்சார்யா, லீலாவதி (பாஸ்கராச்சார்யரின் மகள்) மற்றும் பிரம்மகுப்தர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் வெகு அபூர்வமாகவே தோன்றினார்கள்.

ஆணும், பெண்ணும் நிகரெனக் கொண்ட கலாச்சாரமாக இந்தியக் கலாச்சாரம் தொன்று தொட்டே இருந்து வந்தது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் பொதுவான கொள்கைகளான கொள்ளையடித்தல், பெண்களைக் கவர்ந்து செல்லல், கற்பழிப்புகள் போன்ற இழிவுகள் காரணமாக இந்தியப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

தென்னிந்தியாவிற்கு இரண்டு முறைகள் விஜயம் செய்த (1288 மற்றும் 1293) மார்கோ-போலோ, தெலுங்கு பேசும் பகுதியை நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருந்த ருத்ரம தேவி என்ற பெண்மணியைக் குறித்து மிகவும் புகழ்ந்துரைக்கிறார்.

“இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு துவங்குவதற்குச் சிறிது காலம் முன்பாக இந்திய சமுதாயம் ஒரு தேக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இதே நிலைமை உலகின் எல்லாப் புகழ் பெற்ற கலாச்சாரங்களுக்கும் நிகழ்ந்த ஒன்றே. உதாரணமாக கிரேக்கக் கலாச்சாரத்தைக் கூறலாம். பெரும் வளர்ச்சி கண்ட கிரேக்கக் கலாச்சாரம் உச்ச நிலையை அடைந்த பின்னர் தேக்கமடைந்துப் பின் அழிந்து போனது.

அதே சூழ்நிலை இஸ்லாமிய ஆக்கிரமிப்பினால் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்பட்டது. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கூறியபடி இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்திய சமுதாயத்திற்கும், அதன் கலாச்சார முன்னேற்றத்திற்கும், கல்விக்கும், அறிவியலுக்கும் அளித்த பங்களிப்பு என்பது எதுவுமில்லை.

islamic-jihad-a-legacy-of-forced-conversionபின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன.

குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள்.

அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள்.

இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு.

எனவே அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் அளித்த கல்விமுறையை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மதச்சார்பற்ற கல்வி இஸ்லாமிற்கு எதிரானது என்னும் மனோபாவத்தினால்.

இதன் காரணமாக முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள்.

இந்தியப் பிரிவினைக்கு முந்தைய கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் மைனாரிடிகாளாக இருந்தாலும், கிழக்கு வங்காளத்தில் கட்டப்பட்ட ஏறக்குறைய அத்தனை பள்ளிகளும் இந்துக்களாலேயே கட்டப்பட்டன. அந்தப் பள்ளிகளில் பணி புரிந்தவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்தார்கள்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்திய கல்விமுறையில் மாற்றம் கொண்டு வர விரும்பிய பிர்ட்டிஷ் ராஜாங்கம், கல்கத்தா, பாம்பே மற்றும் சென்னையில் புதிதாக பல்கலக்கழகங்களை அமைத்தது.

இந்த புதிய சூழ்நிலையைத் தங்களுடையதாக்கிக் கொண்ட இந்திய இந்துக்கள் கல்வியிலும், அறிவியலிலும், கலாச்சார மேம்பாட்டிலும், இலக்கியத்திலும் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறினார்கள்.

இந்தப் புதிய கல்வி வாய்ப்பு அமைந்த வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக ரபீந்திரநாத் தாகூர், சி.வி. ராமன் போன்றவர்கள் நோபல் பரிசு பெறுமளவிற்கு இந்துக்களின் கல்வி முன்னேறியது. இந்திய அரசியலிலும் இந்துக்களின் பங்களிப்பு அதிகமாகிக் கொண்டு சென்றது.

பழமையில் ஊறிய இந்துக்களின் மனோபாவம் மாறத் துவங்கியது. சதியும், பெண் சிசுக் கொலையும், குழந்தைத் திருமணங்களும், விதவைத் திருமண மறுப்பும், சாதிக் கொடுமைகளும் தவறானவை என்னும் எண்ணம் இந்துக்களிடையே மேலோங்கியது.

இதனை எதிர்க்கும் குரல்கள் இந்துக்களுக்குள்ளேயே எழுந்தன. இந்தத் தீமைகள் எல்லாம் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை எனினும், இந்திய இந்துக்களில் பெரும்பான்மையோர் இன்றைக்கு இதற்கு எதிரானவரகளாக மாறியிருப்பதுவும் உண்மையே.

பல நூற்றாண்டுகளின் தீமைகள் ஒரே நாளில் ஒழிக்கப்படுவது சாத்தியமில்லை எனினும் இந்திய இந்துக்கள் மாற்றத்தை நோக்கி நடைபோடத் துவங்கி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அதற்கு நேர்மாறாக இஸ்லாமியர்கள் கல்வியிலும் அதனால் உண்டான முன்னேற்றங்களிலும் பங்கெடுக்காமல் தேங்கிக் கிடப்பதுவு இன்றைய இந்தியாவிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும் காணக்கூடிய ஒன்றே.

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

வன்முறையே வரலாறாய்…- 30

Share.
Leave A Reply