பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த குழந்­தை­யான இள­வ­ரசி சார்லொட் எலி­ஸபெத் டயானா, தனது 10 ஆவது வயதில் எவ்­வாறு இருப்பார் என்­பதை வெளிப்படுத்தும் உரு­வப்­ப­ட­மொன்றை அமெ­ரிக்க ஓவிய நிபு­ண­ரான ஜோ முல்லின்ஸ் பிந்­திய கணினி தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி உரு­வாக்கி வெளி­யிட்­டுள்ளார்.

இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­த­ரீ­னது புகைப்­ப­டங்­களை தீவிர ஆராய்ச்­சிக்­குட்­ப­டுத்­திய பின்­னரே புதிய இள­வ­ர­சியின் உரு­வப்­ப­டத்தை ஜோ முல்லின்ஸ் வரைந்­துள்ளார்.

queenபிறந்து நான்கு நாட்­க­ளே­யான இள­வ­ரசி தனது 10 ஆவது வயதில் தனது தாயா­ரான கத்­த­ரீ­னுக்­கு­ரி­யதை ஒத்த கேசம் மற்றும் மூக்­குடன் இந்த உருவப்படத்தில் காணப்­ப­டு­கிறார்.

baby_1அத்­துடன் புதிய இள­வ­ரசி தனது தந்­தை­ யி­னதும் தாயி­னதும் கண்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பச்சை நீல நிற கண்­களைக் கொண்­டி­ருப்பார் என எதிர்வு கூறி­யுள்ள ஓவிய நிபுணர், சிறுமியான இளவரசி அவரது தந்தை வில்லியத்தினு டையதையொத்த உதட்டைக் கொண்டிருப் பார் என தெரிவிக்கிறார்.

Share.
Leave A Reply