ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி’

இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம்.

இந்த செய்தியை சற்று ஆராய்ந்தால் ஈராக் எனும் நாடு சிறுக, சிறுக சீரழிந்து வருவதை உணரமுடியும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடந்த தாக்குதல் போன்று மீண்டும் அமெரிக்கா பற்றி எரியும் அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். அமைப்பு வீடியோ வெளியிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீவிரவாதிகளைக் குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

உலகில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். அமைப்பால் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்று பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது

“அமெரிக்கா பற்றி எரியும்” என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.எஸ். ஆதரவாளர்கள் அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்துவார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

11 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் ஐ.எஸ்.இன் கொடூர காட்சிகள் அடங்கி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3000 பேர் வரையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இப்படி ஏன் செய்கிறார்கள்-? அமெரிக்காவை வம்புக்கிளுக்கிறார்களா-?

அமெரிக்கா நேரடியாக தலையிடாதவரை இதுபோன்ற அச்சுறுத்தல் வீடியோக்களை வெளியிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்… அதில் சந்தேகமில்லை…

ஆனால் அமெரிக்கா திருப்பி அடிக்க ஆரம்பித்தால் ஐ.எஸ். அமைப்பால் தாக்குபிடிக்க முடியுமா-? என்றால்…

அது சந்தேகம்தான்.

article-1198639-05A82597000005DC-969_468x286
லான்செட் அமைப்பின் கணக்குப்படி, 2003ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை ஈராக்கில் சுமார் 1,003 தற்கொலைப் படைத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 12,284 அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருக்கின்றனர்.

ஆனால், இதே சமயத்தில் 200 இராணுவ வீரர்கள்தான் இறந்திருக்கின்றனர். இதைப் பார்க்கும்போது மக்களைக் கொல்ல குண்டு வைக்கிறார்களா?

இல்லை இராணுவத்தைக் கொல்ல குண்டு வைக்கிறார்களா? என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.

ஈராக்கில் 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1.55 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பொதுமக்கள்தான்.

ஈராக்கின் வரலாற்றில் 2006 ஆம் ஆண்டுதான் மோசமானது. அந்த ஒரே வருடத்தில் மட்டும் 29,380 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதே வருடத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 3,077 பொதுமக்கள் பலியாகினர். iraq-suicide-bombing

7 வருடங்கள் கழித்து இது திரும்பவும் நடந்துள்ளது. நடந்துகொண்டிருக்கிறது.

ஆமாம். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மட்டும் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கடந்த வருடத்தில் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் எரிந்துகொண்டிருக்கிறது நாகரிகத்தின் தொட்டிலான ஈராக்.

இவற்றில் பெரும்பாலான குண்டு வெடிப்புகள் கார் வெடிகுண்டுகளால் நிகழ்ந்தவை. ஈராக்கில் இவற்றை ‘ஏழையின் ஏர்ஃபோர்ஸ்’ என்று அழைக்கின்றார்கள். இப்போது ஈராக்தான் உலகின் கார் வெடிகுண்டுகளின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

‘ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் இந்த கார் வெடிகுண்டுகளை மட்டும் தடுக்க முடிவதில்லை’ என்கிறார்கள் அமெரிக்காவின் போர் வல்லுனர்கள்.

2009 ஆம் ஆண்டு தெற்கு ஈராக்கில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த கேம்ப் பக்காவில் இருந்து வெளியே வருகிறார் அபு பக்கர் அல்-பாக்தாதி.

அங்கிருந்த அமெரிக்க இராணுவத்தின் கேர்ணல் கென்னத் கிங்கிடம் ‘நியூயோர்க்கில் பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

ஏதோ நக்கலடித்துவிட்டுச் செல்கிறார் என கென்னத் கிங் நினைத்துக்கொள்ள, இன்று எங்கே அமெரிக்காவுக்கே அவன் வந்துவிடுவானோ என அச்சத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு.

இன்று, அபு பக்கர் அல்-பாக்தாதியின் இருப்பிடத்தைப் பற்றித் தகவல் கொடுத்தால் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு.

abu-bakr-al-baghdadi

ஏன் தெரியுமா?

 

இன்று உலகின் பணக்கார தீவிரவாதி பக்தாதிதான்.

அல்-கொய்தாவின் அய்மன் அல்-ஜவாஹிரியை எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பலம்மிக்கவராகி விட்டார் அல்-பாக்தாதி.

ஆம், அடுத்த ஒசாமா இந்த அபு பக்கர் அல்-பாக்தாதி.

ஈராக்கிலும், தெற்கு சிரியாவிலும் தினமும் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணம் இந்த அல்-பாக்தாதியின் ISIS அமைப்புதான். சமீபத்தில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசுல் நகரத்தை கைப்பற்றிய இந்த அமைப்பு, அங்கிருந்த மத்திய வங்கியில் இருந்த பணத்தையும், தங்கக்கட்டிகளையும், அமெரிக்க தயாரிப்பு இராணுவத் தளவாடங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது.

இப்படித்தான் உலகின் பணக்கார தீவிரவாதியாக, உலகின் பணக்கார தீவிரவாத அமைப்புக்கு தலைமையாக இருக்கிறார் அல்-பாக்தாதி.

தற்போது ஈராக்கை ஆண்டுவரும் ஷியா இனத்தைச் சேர்ந்த பிரதமர் நுரி அல்-மலிக்கியின் ஆட்சியைக் கவிழ்த்து பிரிவினையை உண்டாக்குவதுதான் இந்த அல்-பாக்தாதியின் அமைப்பின் நோக்கம்.

அல்-கொய்தாவைவிட சிறப்பான கட்டளைக் கட்டமைப்பைக் கொண்டதாம் இந்த அமைப்பு.

சமீபத்தில் மொசுல் நகரத்தை கைப்பற்றும்போது அங்கிருந்த அமெரிக்கத் தயாரிப்பு இராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

Sikorsky Uh-60 M Black Hawk

இவற்றில் ஹம்வி, T-55 டாங்க் போன்ற அதிநவீன வாகனங்களும் அடங்கும். மொசுல் விமான நிலையத்தில் இருந்த Sikorsky UH-60 Black Hawk ரக இராணுவ ஹெலிகொப்டர்களையும், கார்கோ விமானங்களையும்கூட தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர் இவர்கள்.

ஆனால், இந்த அதிநவீன பிளாக்-ஹாக் வகை ஹெலிகொப்டரை அவர்களுக்கு இயக்கத் தெரியுமா என்பது சந்தேகமே!

அபு பக்கர் அல்-பாக்தாதி, வெறுமனே ஒளிநாடாக்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டு இருக்கும் ஒருவரல்ல, ‘செயலில்’ காட்டும் மனிதர் என்கிறார்கள் பிரபல பத்திரிகையாளர்கள்.

இன்னமும் இவர் இருக்கும் இடம் அமெரிக்காவுக்குத் தெரியாது. அல்-ஜவாஹிரியே இவருடைய நுனுக்கங்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் என்கிறார்கள்.

இப்படியாகப் போகும் ஐ.எஸ். மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு அமைப்புதான்!

எஸ்.ஜே.பிரசாத்

 

அல்பக்தாதி உயிரிழந்தது உண்மைதானா? : எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-8) -எஸ்.ஜே.பிரசாத்

 

Share.
Leave A Reply