இஸ்லாமாபாத்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மறைவிடம் குறித்த தகவலை 2.5 கோடி டாலர் பெற்று, அமெரிக்க புலனாய்வு துறையிடம், பாகிஸ்தான் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர் என்று  இஸ்லாமாபாதிலிருந்து வெளிவரும் டான் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

Seymour-Hersh_3300165bInvestigative journalist Seymour Hersh

டான் நாளிதழில் அமெரிக்க புலனாய்வு பத்திரிக்கையாளரும் மற்றும் ஆசிரியருமான சேய்மோர் எம். ஹெரிஸ் இது குறித்து ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

முன்கூட்டியே தெரியும்: பாகிஸ்தானின் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குறித்து ஹெரிஸ் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளான ஜெனரல் ஆஷிப் பர்வேஷ் கியானி, மற்றும் ஜெனரல் அஹமது சுஜா பஷா ஆகியோர் தங்களுக்கு அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே ஏதும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் பொய்.

ஒசாமாவின் இருப்பிடத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்தது, அவன் இருப்பிடத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட அறிக்கை அனைத்தையும் பாகிஸ்தானிடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட வேண்டும், ஆனால், ஒருவாரத்திற்கு பின்பே, வெளிஉலகத்திற்கு ஒசமாவின் இறப்பு தெவிக்கப்பட வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ. அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.

ஒசாமா பின்லேடன் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்தது, சவூதிஅரேபியா அரசுக்கு நன்கு தெரியும். ஒசாமா கொல்லக்கூடாது, அவரை கைதியாகவே வைத்திருக்க ஐ.எஸ்.ஐ. அமைப்பை சவூதிஅரேபியா அரசு கேட்டுக்கொண்டது.

அதேபோல, ஒசாமாவையும் சிறைக்கைதியாகவே ஐ.எஸ்.ஐ. நடத்தி, அவனை வெளியே விடாமல் பார்த்துக்கொண்டது.

அதுமட்டுமல்லாமல், ஒசாமா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தானா என்பது வெளிஉலகத்திற்கு தெரியாமல் இருக்க எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ. அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஒசாமா கொல்லப்பட்ட விஷயத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தானின் அதிகாரிகளை ஆலோசிக்காமல் தெரிவித்துவிட்டார்.

இதனால், பாகிஸ்தானின் ராணுவ மரியாதை வெளிஉலகில் கெட்டுவிட்டது. அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமா மறைவிடம் குறித்து தகவல் அளித்த டாக்டர் சாகில் அப்ரிதி தற்போது பெஷாவர் சிறையில் உள்ளார்.

உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக, இவரை கேடயமாகப் அமெரிக்காவும், பாகிஸ்தானும், பயன்படுத்திக் கொண்டுவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

110502150259_binladencompound4662.5 கோடி டாலர் பரிசு

அமெரிக்க ராணுவம் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் முக்கிய அதிகாரிகளே காரணம்.

ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முக்கிய இரு அதிகாிகள் ஒசாமா பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க ராணுவத்திடம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இஸ்லாமாபாத்தில் இருந்த அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அதிகாரி ஜோனாதன் பேங்கை, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முக்கிய இரு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர்.

அந்த இருவரும், பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கியிருந்த இடம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு, அதற்கு பலனாக, 2.5 கோடி டாலர்கள் பரிசுத்தொகையும் பெற்றுச்சென்றனர்.

இந்த இருவரும் தற்போது வாஷிங்டனில், அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்புக்காக பணி செய்து வருகின்றனர். அவர்கள் யாரென்று இதற்கு மேல் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

bin-laden-killed_3300189bஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடம் பென்டகன், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் ஆகிய தாக்குதல்களை கடந்த 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர்.

இதில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்.

இவரைப் பிடிக்க அமெரிக்கா தீவிரம் காட்டி, ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர் என்ற பெயரில் நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கையின் பலனாக, கடந்த 2011- மே 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் பதுங்கியிருந்த போது ஒசாமாவை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.

Share.
Leave A Reply