பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார்.
அவரது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு: விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு ரூ.66,44,73,573 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், கட்டுமான வேலைகளுக்கான செலவு, ரூ.27,79,88,945 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை.
அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் ரூ.5 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 60 ரூபாய் குறைகிறது.
இதை கழித்து பார்த்தால் உண்மையிலேயே கட்டுமானத்திற்கு, ரூ.22,69,34,855தான் ஆகியுள்ளது. திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடியே 45 லட்சத்து 4222 என்று அரசு தரப்பு கூறியிருந்தது.
ஆனால், ரூ.28 லட்சத்து 68 ஆயிரத்துக்கு சான்று காண்பிக்க முடியவில்லை.
எனவே இதை கழித்து பார்த்தால், திருமணத்திற்கான செலவு, ரூ.6,16,36,222 கோடியாகியுள்ளது. இவ்விரண்டு மாற்றப்பட்ட மதிப்பையும் சேர்த்து கூட்டினால், ரூ.28 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரத்து 107 வருகிறது.
மொத்த சொத்த மதிப்பில் இருந்து இதை கழித்தால், எஞ்சுவது ரூ.37,59,02,466 ஆகும். குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணகக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
கணக்கு காட்டாத தொகை ரூ.2,82,36,812 கோடியாகும். மொத்த வருவாயில், அவர் கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே ஆகும்.
ஆனால், கிருஷ்ணானந்த் அக்னிஹோரி மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு இடையேயான வழக்கில், ஒருவருக்கு, 10 சதவீதம் வரை வருமானத்துக்கு மேல் சொத்து இருந்தால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு வெளியிட்டிருந்த சுற்றரிக்கையில் கூட 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று உள்ளது.
எனவே, ஏ 1 (ஜெயலலிதா) விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலை செய்யப்படுவதால், ஏ 4 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு குமாசாமி தெரிவித்துள்ளார்.