ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.

சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து தோகுக் மற்றும் மொசூல் நகருக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள ‘செக்ஸ்’ மார்க்கெட்டில் அவர்களை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து விலைபேசி விற்கிறார்கள்.

விலைக்கு வாங்கப்படும் சிறுமிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அந்த இயக்க தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செக்ஸ் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

20DC77D000000578-3073662-image-a-35_1431094060667ஒரு பெண் 20 பேரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் கற்பு நிலை சரி செய்வதற்காக ஆபரேசன்கள் நடத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஐ.நா. சபையின் சிறப்பு செயலாளர் ஷைனாப் பங்குரா கடந்த ஏப்ரல் மாதம் 16–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை ஈராக், சிரியா, துருக்கி, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது ஐ.எஸ். தீவிரவாதத்தில் இணைந்து அங்கு ‘செக்ஸ்’ அடிமைகளாகி பின் மீண்டு வந்த சிறுமிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இச் செய்தியை அவர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply