நேபாளத்தில் நான்காவது தடவையாக இன்றும் நிலநடுக்கம் நண்பகல் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் இன்றைய நிலநடுக்கத்திற்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாகவும், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில் நேபாள பாராளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு ஓடினர்.