சுவிட்சர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நபர் ஒருவர் வினோதமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Valais மண்டலத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், Saint Maurice பகுதியில் சாலையின் நுழைவு வாயிலில், காலை 10.30 மணியளவில் விபத்து ஒன்றினை ஏற்படுத்திவிட்டு மேற்கில் உள்ள Lausanne மண்டலம் நோக்கி பயணித்துள்ளார்.
அந்த நபர் பெண்மணி ஒருவரின் காரை பின் தொடர்ந்து சென்று அந்த காரினை மறித்துள்ளார்.
இதையடுத்து அந்த காரினை ஓட்டிச் சென்ற பெண்மணியுடன் பேசத் தொடங்கிய அவர், திடீரென அந்த பெண்ணின் காருக்குள் பாய்ந்து, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரினை ஓட்டிச் சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் உடனடியாக அவசர சேவைகளை தொடர்பு கொண்டு தனது கார் திருடப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் Saint Sigismond தேவாலயத்துக்கு சென்ற அந்த நபர், தேவாலயத்தின் வாசலில் தனது உடைகளை கலைந்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த சிலர் காலை 11.15 மணியளவில் பொலிசாரிடம் அந்த நபரின் வினோத நடவடிக்கைகளை புகார் அளித்துள்ளனர்.
அதற்குள் நிர்வாணமாக தேவாலயத்துக்குள் நுழைந்த அந்த நபர், 6 அடி உயரத்தில் அமைந்துள்ள தேவாலயத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
மேலும், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தேவாலயத்தில் நிர்வாணமாக சென்று தற்கொலை செய்துகொண்ட அந்த வினோத நபர் பற்றி விசாரித்து வரும் பொலிசார், அவரை பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை