தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர்.

இலங்கை தமிழ்ப்பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும், அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் வேலை செய்து  கொண்டிருக்கும்  தனது கணவர் மைக்கேலுடன் இணைந்து கொள்வதற்காக ஒரு சட்டவிரோதமான படகில் பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்து நவ்ரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் வைத்து அந்த இலங்கை தமிழ்ப் பெண்ணிடம், நீ உனது கணவனை அவுஸ்திரேலியாவில் காண இயலாது. ஆகவே திரும்பி சென்றுவிடு என்று அச்சுறுத்தியுள்ளனர்.

auastraliawomen_faceprob_004

இதனால் அதிர்ச்சியடைந்த ருத் என்ற பெயருடைய இலங்கை தமிழ்ப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்தபிறகும் கூட அவுஸ்திரேலியாவில் அரவது கணவனை காண அனுமதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த இலங்கைத் தமிழ்ப்பெண் இரண்டாவது முறையாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர், தனது நிலைமையை வழக்கறிஞர்களிடம் எடுத்துக்கூறுகையில், நவ்ரு தடுப்பு முகாம்களில் நான் சந்திந்த அனுபவங்கள், நரக சித்ரவதைக்கு இணையான அனுபவங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரத்தில் இந்த இலங்கை தமிழ்ப்பெண்ணிற்கு தீவிர மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது.

பிரிஸ்பேனில் இலங்கை தமிழ்ப்பெண் தனது கணவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை கூட்டிச்செல்ல அழைத்தும், அவரது கணவர் ஓடோடி வருவதற்குள் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இங்கைத் தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவிற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு சென்றுவிட்டனர்.

ஓடோடிவந்த அவரது கணவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கதறி அழுதுள்ளார்.

கடைசிவரையில் அவர்கள் இருவரும் சந்திக்க இயலாதபடி நவ்ரு தடுப்பு முகாம்களில், இந்த இருவரும் தனித்தனியே பிரிக்கப்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

இலங்கை தமிழ்ப்பெண்ணும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் தனியாக கவலையுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த கொடுமைக்கு அவுஸ்திரேலிய குடியமர்வு, குடியகல்வு அதிகாரிகள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று சமூகநல அமைப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கூறியதாவது, புகலிடம் தேடி அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்களை, அவுஸ்திரேலியாவிலேயே உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

அதற்கு பதிலாக, அவர்களை வெகு தொலைவில் உள்ள நவ்ரு தீவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வது தவறாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

auastraliawomen_faceprob_002auastraliawomen_faceprob_003

Share.
Leave A Reply