யாழ் புங்குடுதீவில் பளிடல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு உயர்தரவகுப்பு மாணவி விதியா கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு வல்லனை சேர்ந்த ரவி, செந்தில் மற்றும் சின்னாம்பி ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் ரவி முதலில் கைது செய்யப் பட்டதாகவும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பஸ் ஒன்றில் தப்பிச் சென்றுகொண்டிருந்தத ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இவர்கள் மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட அவரது உடல் ஆலடி சந்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலையில் உள்ள பற்றை ஒன்றுக்குள் அவரது வாய் கட்டப்பட்ட் நிலையிலும் கைகள் கால்கள் மரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேதே பரிசோதனையின் பின்னர் வவித்யாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இன்று அவரது இருதிக்கிரியைகளும் நடைபெற்றன. அவரது இறுதி நிகழ்வில் எராளமான பொதுமக்களும்